விஜய்சேதுபதியின் முகிழ் வெப் மூவி ட்ரைலர் அவுட்!
சென்னை: விஜய் சேதுபதி, ரெஜினா நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் தான் முகிழ்.
கார்த்திக் ஸ்வாமிநாதன் படத்தை இயக்க விஜய் சேதுபதியே படத்தை தயாரித்துள்ளார்.
இப்படத்தின் ட்ரைலர் புத்தாண்டு ஸ்பெஷலாக வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

குடும்ப கதை
தமிழ் சினிமாவில் கதைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் சில படங்களே வருகிறது. அந்த படங்களின் வரிசையில் முகிழ் கண்டிப்பாக இடம்பெறும். கணவன், மனைவி, குழந்தை என ஒரு குடும்பத்தை சுற்றி எதார்த்தமாக இந்த படத்தின் கதை நகர்கிறது.

வாழ்த்தும் ரசிகர்கள்
இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் மகள் ஸ்ரீஜா விஜய்சேதுபதி ஒரு முக்கிய ரோலில் நடித்துள்ளார். முகிழ் படத்தில் அறிமுகமாகும் ஸ்ரீஜாவுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சிந்துபாத் படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

ஆர்வத்தில் ரசிகர்கள்
விஜய் உடன் இணைந்து மாஸ்டரில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி. அதை தொடர்ந்து லாபம், கடைசி விவசாயி, யாதும் ஊரே யாவரும் கேளிர் தற்போது முகிழ் என ரிலீசுக்கு படங்கள் வரிசை கட்டியுள்ளது விஜய் சேதுபதி ரசிகர்களை ஆர்வத்தில் மிதக்க செய்துள்ளது.

வைரலாகும் ட்ரைலர்
ஒரு மணி நேர வெப் திரைப்படமாக வெளிவரவுள்ள முகிழ் படத்தின் ட்ரைலர் மிகவும் எதார்த்தமாக ரசிக்கும் வகையில் அமைந்துள்ளது. மென்மையான கதைகளத்தை கொண்ட இந்த படத்தின் ட்ரைலரை ரசிகர்கள் பாராட்டி இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications