துப்பாக்கி முனையில் சிறுவனை கடத்தும் விஜய் சேதுபதி.. கோட் சூட் கூலர்ஸுடன்.. தீயாய் பரவும் போட்டோ!
சென்னை: நடிகர் விஜய் சேதுபதி மும்பைக்கார் படத்தில் நடிக்கும் கெட்டப் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் தனித்துவமான நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி. ஆரம்பத்தில் கிடைத்த கதாப்பாத்திரங்களில் எல்லாம் நடித்து வந்த விஜய் சேதுபதி தற்போது கோலிவுட்டின் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார்.
தனது எதார்த்தமான நடிப்பால் ஏராளமான ரசிகர்களையும் குவித்து வைத்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி என்றும் கலக்கி வருகிறார்.

மாநகரம் படத்தின் ரீமேக்
அந்த வகையில் மும்பைக்கார் என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார் விஜய் சேதுபதி. இந்தப் படம் தமிழில் வெளியான மாநகரம் படத்தின் ரிமேக் ஆகும்.

கோட் சூட்.. கூலர்ஸ்
இந்நிலையில் இந்தப் படத்தில் லீடிங் ரோலில் நடிக்கும் விஜய் சேதுபதி தனது கெட்டப்பை டிவிட்டர் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். கோட் ஷுட், கூலர்ஸ், ஹெட் செட் என எங் லுக்கில் கலக்கலாக உள்ளார் விஜய் சேதுபதி.

சிறுவனை கடத்தும் விஜய் சேதுபதி
அவர் ஷேர் செய்துள்ள போட்டோவில் சிறு பையன் ஒருவரை துப்பாக்கி முனையில் வாயை கட்டி கடத்துவதாக உள்ளது. விஜய் சேதுபதி ஷேர் செய்துள்ள இந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஒரிஜினல் மாநகரம்
இந்தப் படத்தை சந்தோஷ் சிவன் இயக்குகிறார். தன்யா மனிக்டலா, சஞ்சய் மிஸ்ரா, சச்சின் கெதேகர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். மாநகரம் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார்.

ஜாவேத் ரியாஸ்
இதில் சுதீப் கிஷன், ஸ்ரீ, ரெஜினா கெசன்ட்ரா, சார்லி. முனிஷ்காந்த் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஜாவேத் ரியாஸ் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











