எப்படி இருந்த சேது இப்போ இப்படி ஆகிட்டார்... விஜய் சேதுபதியின் புது கெட்டப்
சென்னை : நடிகர் விஜய் சேதுபதி படத்திற்குப் படம் வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பவர். இவர் நடிப்பில் இந்த வருடம் வெளிவந்த அனைத்துப் படங்களும் நல்ல வரவேற்பைப் பெற்றன.
இந்நிலையில் இவர் தற்போது 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தை இயக்கிய கோகுல் இயக்கத்தில் ஜுங்கா என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பாரீஸில் நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் விஜய் சேதுபதியின் புதிய கெட்டப் புகைப்படங்கள் வெளிவந்துக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில், பெண் வேடமிட்ட புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலானது.
இந்நிலையில் அதிகாரப்பூர்வமாக இப்படத்தின் போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் விஜய் சேதுபதியின் புதிய கெட்டப் அனைவரையும் கவர்ந்துள்ளது. விஜய் சேதுபதி கையில் ஒரு துப்பாக்கியுடன் கோட்சூட் அணிந்து வித்தியாசமான ஹேர்ஸ்டைல் மற்றும் மீசையில் தோற்றமளிக்கிறார்.
இந்தப் படத்தை விஜய் சேதுபதியே தயாரிப்பது குறிப்பிடத்தக்கது. விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சாயிஷா சாஹல் நடிக்கிறார். காமெடியனாக யோகிபாபு நடிக்கிறார். சித்தார்த் விபின் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.


Click it and Unblock the Notifications











