மாஸ் கெட்டப்பில் விஜய்சேதுபதி..வைரலாகும் புகைப்படம் !

சென்னை : விஜய் சேதுபதியின் மாஸான போட்டோஷூட் ஒன்று இணையத்தில் வெளியாகி அனைவராலும் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

Recommended Video

Thalapathy Vijay க்கு 20 வயசுல அவ்வளவு Maturity • Vanitha Vijaykumar Exclusive

எப்போதும் சாதாரணமாகவும், யதார்த்தமாகவும் பழகக்கூடிய நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் மக்களால் கொண்டாடப்படும் மிகப் பெரிய நடிகராக இருந்து வருகிறார்.

கதைகளை தேர்ந்தெடுப்பதிலும், அதை தனது நடிப்பால் மெருகேற்றுவதிலும் படத்திற்கு படம் வித்தியாசம் காட்டி வரும் இவர் அடிக்கடி தனது தோற்றத்தை மாற்றி படங்களின் மூலம் மாஸ் காட்டி வருகிறார்.

மிகப்பெரிய வரவேற்பு

மிகப்பெரிய வரவேற்பு

தனது ஒவ்வொரு படங்களிலும் வித்தியாசமான தோற்றங்களில் மாஸ் காட்டி வரும் விஜய் சேதுபதி யாரும் எதிர்பார்க்காத கதைகளை தேர்ந்தெடுப்பதிலும், அவ்வாறு தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பு இன்றளவும் இருந்து வருகிறது.

முன்னணி இயக்குனர்களுடன்

முன்னணி இயக்குனர்களுடன்

ஆரம்ப காலத்தில் நலன் குமாரசாமி, கார்த்திக் சுப்பராஜ் என அறிமுக இயக்குனர்களுடன் இணைந்து வெற்றி படங்களை கொடுத்து திரைப்படத்துறைக்குள் காலடி எடுத்த வைத்த விஜய் சேதுபதி தற்போது பல முன்னணி இயக்குனர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.

பாராட்டுக்களைப் பெற்று

பாராட்டுக்களைப் பெற்று

சூதுகவ்வும், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, 96, விக்ரம் வேதா என பலரும் நினைத்து பார்க்க முடியாத பல கதைகளில் நடித்து தமிழ் மக்களிடம் மிகவும் பிரபலமான விஜய் சேதுபதி தற்போது மலையாளம், தெலுங்கு, என பல மொழிகளிலும் நடித்து பாராட்டுக்களைப் பெற்று வருகிறார்.

வெற்றிக் கூட்டணி

வெற்றிக் கூட்டணி

காக்கா முட்டை படத்திற்கு பிறகு இயக்குனர் மணிகண்டன், விஜய் சேதுபதியுடன் இணைந்து ஆண்டவன் கட்டளை என்ற படத்தை இயக்கியிருந்தார். ஆண்டவன் கட்டளை நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது கடைசி விவசாயி என்ற படத்தையும் இந்த வெற்றிக் கூட்டணி இணைந்து உருவாக்கி வருகிறது.

பரபரப்பாக பகிரப்பட்டு

பரபரப்பாக பகிரப்பட்டு

இந்த நிலையில் சேதுபதியின் இதுவரை யாரும் கண்டிராத போட்டோ ஸ்டில்கள் தற்போது இணையதளத்தில் வெளியாகி பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது. இந்த புகைப்படங்களில் விஜய்சேதுபதி மிகவும் குட்டையான தலை முடியுடனும், தாடியுடனும் மிரட்டும் தோரணையில் அனைவரும் மிரளும் வகையில் இருக்கும் இந்த போட்டோக்கள் இது வரை யாரும் பார்த்திராத நிலையில் செம மாஸ் அண்ட் கிளாஸாக இருக்கிறார்.

ஃபிட்டான உடல்

ஃபிட்டான உடல்

பல்வேறு புகைப்படங்கள் அடங்கியுள்ள இந்த புகைப்பட தொகுப்பில் விஜய் சேதுபதி மிகவும் குட்டையான தலைமுடி, கையில் டீ கிளாஸ், ஃபிட்டான உடல் என பார்க்கவே படு மாஸாக எதிர்பார்ப்பை கூட்டி வரும் இந்த போட்டோ ஷூட் போட்டோக்களை இயக்குனர் மணிகண்டனால் எடுக்கப்பட்டது என செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. விஜய் சேதுபதியின் ஆரம்ப காலகட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்கள் பல ஆண்டுகளுக்குப்பிறகு தற்போது வெளியாகி அவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

ரியாஸ்

ரியாஸ்

நானும் ரவுடிதான் படத்தில் நடித்த ரியாஸ் இந்த புகைப்படங்களை தனது முகப்புத்தகம் வாயிலாக வெளியிட்டிருந்த நிலையில் பல்வேறு தரப்பினரும் இந்த புகைப்படங்களை பார்த்து வாயைப் பிளந்து வருகின்றனர்.

உதவியாக இருந்தேன்

உதவியாக இருந்தேன்

மேலும் இந்த பதிவை பார்த்த நடிகர் சௌந்தர்ராஜன் புகைப்படங்கள் அனைத்தும் இயக்குனர் காக்காமுட்டை மணிகண்டனால் 2011ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது எனவும் இதற்கு நான் அப்பொழுது உதவியாக இருந்தேன் எனவும் கூறியிருந்தார்.

கவனத்தையும் ஈர்த்து

கவனத்தையும் ஈர்த்து

விஜய் சேதுபதி தற்பொழுது நடிகர் விஜய்யுடன் முதல் முறையாக இணைந்து மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்புகள் முழுவதும் முடிந்து ரசிகர்களின் நீண்ட எதிர்பார்ப்புடன் வெளியாக காத்திருக்கின்ற நிலையில் இப்போது இந்த போட்டோக்கள் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

பீட்சாவிற்கு முன்

பீட்சாவிற்கு முன்

இந்த புகைப்படங்களை பார்த்த பலரும் விஜய் சேதுபதி பார்க்க சத்யா படத்தில் வரும் கமல்ஹாசன் போலவே இருப்பதாக தெரிவித்துவரும் நிலையில். இந்த போட்டோக்கள் அனைத்தும் பீட்சா படம் வெளியாவதற்கு முன்பு எடுக்கப்பட்டது என நடிகர் ரியாஸ் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X