லஞ்சம் கொடுக்கலாம் தப்பில்லை... விஜய் சேதுபதி ஓபன் டாக்... மாஸ்டர்செப் தமிழ் புது ப்ரமோ வெளியீடு

சென்னை : நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் மாஸ்டர்செப் இந்தியா தமிழ் நிகழ்ச்சி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிகழ்ச்சியின் அடுத்தடுத்த ப்ரமோக்களை சன் டிவி தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

தற்போதைய புதிய ப்ரமோவில் விஜய் சேதுபதி லஞ்சம் கொடுப்பதை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார்.

சிறப்பான கதாபாத்திரங்கள்

சிறப்பான கதாபாத்திரங்கள்

நடிகர் விஜய் சேதுபதி தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். அது சிறிய ரோலாக இருந்தாலும் கனமான கதாபாத்திரமாக இருந்தால் அவர் நடிப்பதற்கு உடனடியாக தலையாட்டி விடுவார். வில்லன் ரோல்களில் கூட அவர் நடிப்பதற்கு தயங்குவதில்லை. தொடர்ந்து ரஜினி மற்றும் விஜய்க்கு அவர் வில்லனாக நடித்துள்ளார்.

தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதி

தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதி

இந்நிலையில் தற்போது புதிய முயற்சியாக பிரபல டிவி ஷோவான மாஸ்டர்செப் இந்தியா தமிழ் நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்கவுள்ளார். மிகவும் பிரமாண்டமான வகையில் இந்த நிகழ்ச்சி எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை வெளியிடப்பட்டுள்ள ப்ரமோக்களிலேயே பிரமாண்டம் சிறப்பாக உள்ளது.

லஞ்சத்தை ஆதரிக்கும் விஜய் சேதுபதி

லஞ்சத்தை ஆதரிக்கும் விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி ஹெலிகாப்டரில் வந்து இறங்கி சமையலைப் பற்றி பேசுவது சுவாரஸ்யத்தை வரவழைத்துள்ளது. இந்நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய ப்ரமோவும் ரசிகர்களை கவரும்வகையில் உள்ளது. இதில் லஞ்சம் கொடுப்பதை ஆதரிக்கும் வகையில் பேசுகிறார் விஜய் சேதுபதி.

லஞ்சம் கொடுத்தால் தவறில்லை

லஞ்சம் கொடுத்தால் தவறில்லை

அழகான தமிழ்நாட்டு உடையில் இந்த ப்ரமோவில் வரும் விஜய் சேதுபதி, அன்பாக சமைத்து பரிமாறுபவர்களுக்கு குட்டி குட்டியாக லஞ்சம் கொடுத்தாலும் அது தவறில்லை என்று தெரிவித்துள்ளார். இந்த ப்ரமோவில் அவர் தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறார். அதுவும் ஸ்டைலிஷ்ஷாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X