twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காந்தி டாக்ஸ்..கமல் படத்துக்குப் பிறகு இதுதான்..பாலிவுட்டில் உருவாகும் மவுனப் படத்தில் விஜய் சேதுபதி

    By
    |

    சென்னை: பாலிவுட்டில் உருவாகும் 'காந்தி டாக்ஸ்' என்கிற மவுனப்படத்தில் விஜய் சேதுபதி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

    நடிகர் விஜய் சேதுபதி, தமிழில் இப்போது லாபம், யாதும் ஊரே யாவரும் கேளீர், துக்ளக் தர்பார் உட்பட சில படங்களில் நடித்து முடித்துள்ளார்.

    தெலுங்கில் உப்பென்னா, மலையாளத்தில் நித்யா மேனனுடன் 191 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

    மவுனப்படம்

    மவுனப்படம்

    இந்நிலையில் இந்தியில் அவர் நடித்து வருகிறார். அந்தாதுன் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கும் படம், சந்தோஷ் சிவன் இயக்கும் 'மும்பைக்கர்', ஷாஹித் கபூர் நடிப்பில் உருவாகும் வெப் சீரிஸ் என வரிசையாக அவர் நடிக்கவுள்ளார். மேலும் தமிழில் அவர் வில்லனாக நடித்த விக்ரம் வேதா திரைப்படமும் இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது. இந்நிலையில் இந்தியில் உருவாகும் மவுனப்படம் ஒன்றிலும் அவர் நடிக்க இருக்கிறார்.

    காந்தி டாக்ஸ்

    காந்தி டாக்ஸ்

    கிஷோர் பாண்டுரங் பலேகர் இந்தப் படத்தை இயக்குகிறார். விஜய் சேதுபதி, 'காந்தி டாக்ஸ்' திரைப்படத்தின் மூலம் தனது தடத்தை பாலிவுட்டில் பதிவு செய்யத் தயாராக இருக்கிறார். கிட்டத்தட்ட 33 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியத் திரையுலகில் தயாராகப் போகும், மவுனத் திரைப்படம் இது.

    புஷ்பக் விமானம்

    புஷ்பக் விமானம்

    இந்தப் படத்தைப் பற்றி பேசிய இயக்குநர் பாண்டுரங் பலேகர், 19 வருடங்களாக இந்தச் சவாலான கதையை தயார் செய்தது குறித்தும், தனது கனவை 'காந்தி டாக்ஸ்' மூலம் நனவாக்கியது குறித்தும் பகிர்ந்துள்ளார். 1987ஆம் ஆண்டு, கமல்ஹாசன் நடிப்பில் உருவான 'புஷ்பக விமானம்' என்கிற படமே கடைசியாக உருவான மவுனப் படம்.

    சவாலான கதை

    சவாலான கதை

    இந்தப் படத்தில் ஏன் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க முடிவெடுத்தேன் என்று கூறியுள்ள அவர், "இந்தப் படம் என் இதயத்துக்கு நெருக்கமான படம். விஜய் சேதுபதி தனது நடிப்பின் மூலம் சவாலான கதைக்கு உரிய நடிப்பைத் தரக் கூடியவர். அவர் இந்தத் திரைக்கதையைப் படித்தவுடனேயே, படம் குறித்த எனது பார்வையை, அணுகுமுறையை முழுவதுமாகப் புரிந்து கொண்டார்.

    நடிப்புத் திறன்

    நடிப்புத் திறன்

    ஒவ்வொரு இயக்குநரும் தங்கள் நடிகர்களிடமிருந்து குறிப்பிட்ட சில குணாதிசயங்களை எதிர்பார்க்கிறார்கள். இந்தப் படத்தில் நாயகனாக நடிக்க பாலிவுட்டில் நடிகர்களைத் தேடிக் கொண்டிருந்த நேரத்தில் மற்ற மொழித் திரைத் துறைகளிலும் தேடினேன். அப்போதுதான் விஜய் சேதுபதி பற்றி தெரிய வந்தது.

    அவரது நடிப்புத் திறன், ஸ்டைல், குரலில் இருக்கும் ஆற்றல் எல்லாம் வியக்கவைத்தது.

    கதையின் நாயகன்

    கதையின் நாயகன்

    அவரைப் பார்த்தவுடன் என் கதையின் நாயகன் கிடைத்து விட்டான் என்பதை உணர்ந்தேன். அவர், அவரது தொழிலில் அற்புதத் திறமையாளர் என்பது மட்டுமல்ல, மிகவும் எளிமையான, பிரச்சாரம் செய்யாத நட்சத்திரம். தனது படங்களுக்காக எந்தவிதமான எல்லைக்கும் செல்லக் கூடியவர்.

    உற்சாகமாக இருக்கிறேன்

    உற்சாகமாக இருக்கிறேன்


    அவரோடு பணியாற்றுவதில், எனது கனவுப் படத்தை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஆரம்பிப்பதில் உற்சாகமாக இருக்கிறேன்" என்று கூறியுள்ளார். திவய் தமிஜா க்ரியேட்டிவ் ப்ரொடியூஸராக பணியாற்றும் 'காந்தி டாக்ஸ் திரைப்படத்தை மூவி மில் என்டர்டெய்ன்மென்ட் தயாரிக்கிறது.

    English summary
    Actor Vijay Sethupathi has shared first-look poster of his upcoming film ‘Gandhi Talks’. The Bollywood silent film will be helmed by Kishor Pandurang Belekar.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X