விஜய் சேதுபதியின் மலையாள திரைப்படம் ஓடிடியில் வெளியாகிறதா!

சென்னை : தமிழில் முன்னணி நடிகராக உள்ள விஜய் சேதுபதி இந்தி தெலுங்கு மலையாளம் என பல மொழிகளிலும் நடித்து வருகிறார்.

மலையாளத்தில் மார்கோனி மதாய் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் தற்போது 19 (1) (a) என்ற படத்தில் நடித்து வருகிறார்.

கொரானா சூழல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் ஏற்கனவே பல திரைப்படங்கள் வரிசை கட்டிக் கொண்டு ஓடிடியில் வெளியாக காத்துக் கொண்டிருக்க இப்பொழுது விஜய்சேதுபதியின் 19 (1) (a) திரைப்படமும் ஓடிடியில் வெளியாக உள்ளது.

இந்திய அளவில்

இந்திய அளவில்

தனது இயல்பான நடிப்பின் மூலம் இப்பொழுது இந்திய அளவில் பிரபலமான நடிகராக உள்ள விஜய் சேதுபதிக்கு பாலிவுட்டிலும் எக்கச்சக்கமான ரசிகர்கள் இருந்து வர அங்கும் பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

மும்பை கர்

மும்பை கர்

தமிழில் காத்துவாக்குல ரெண்டு காதல்,மாமனிதன், யாதும் ஊரே யாவரும் கேளிர், லாபம் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி இந்தியில் பெயரிடப்படாத வெப்சீரிஸ் ஒன்றிலும், மாநகரம் ஹிந்தி ரீமேக் மும்பை கர் படத்திலும் நடித்து வருகிறார்.

முக்கியமான கதாபாத்திரத்தில்

முக்கியமான கதாபாத்திரத்தில்

மலையாளத்தில் மார்கோனி மதாய் என்ற படத்தின் மூலம் அறிமுகமான விஜய்சேதுபதி இப்பொழுது விஎஸ் இந்து இயக்கத்தில் 19 (1) (a) என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் நடிகை நித்யாமேனன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வர கேரளாவில் உள்ள காட்டுப்பகுதியில் படப்பிடிப்பு மிக மும்முரமாக நடைபெற்று முடிவு பெற்றுள்ளது.

ஓடிடியில் வெளியிட முடிவு

ஓடிடியில் வெளியிட முடிவு

விரைவில் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த படக்குழுவுக்கு சோதனை கொடுக்கும் விதமாக கொரானா பரவல் கேரளா முழுவதும் அதிதீவிரமாக இருப்பதால் 19 (1) (a) திரைப்படத்தை ஓடிடியில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X