காசு, பணம், துட்டு கெட்டப்பில் "55 வயது" விஜய் சேதுபதி... ‘ஆரஞ்சு மிட்டாய்’ பர்ஸ்ட் லுக் போஸ்டர்!

சென்னை: விஜய் சேதுபதி தயாரித்து நடிக்கும் ஆரஞ்சு மிட்டாய் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில், நரைத்த தலையுடன் காசு, பணம், துட்டு படப் பாடல் ரேஞ்சுக்கு விஜய் சேதுபதி அமர்ந்திருக்கிறார்.

வித்தியாசமான கதைகளைத் தேடிப் பிடித்து நடித்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் படங்களில் இளமையான தோற்றத்தில் நடித்திருந்தவர் தடாலடியாக சூது கவ்வும் படத்தில் 45 வயதிற்கு மேற்பட்டவர் தோற்றத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், இந்த ஆரஞ்சு மிட்டாய் படத்தில் இன்னும் ஒருபடி மேலே போல் தலை நரைத்த "அங்கிள்" ஆக நடித்துள்ளார்.

இறுதி கட்டப் படப்பிடிப்புகள்...

இறுதி கட்டப் படப்பிடிப்புகள்...

ஆரஞ்சு மிட்டாயின் கதையில் ஈர்க்கப் பட்டு தானே தயாரிப்பதாக களத்தில் இறங்கினார் விஜய் சேதுபதி. இப்படத்தின் இறுதி கட்டப் படப்பிடிப்புகள் நடந்து வருகிறது.

ஆம்புலன்ஸ் பயணம்...

ஆம்புலன்ஸ் பயணம்...

இப்படத்தில் தலைநரைத்த 55 வயது தாத்தா தோற்றத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். படம் முழுவதும் ஆம்புலன்சில் பயணிப்பது போன்ற கதாபாத்திரம்.

சிம்மாசனத்தில் விஜய் சேதுபதி...

சிம்மாசனத்தில் விஜய் சேதுபதி...

கடந்தவாரம் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டர் வெளியானது. அதில், வயதான தோற்றத்தில் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார் விஜய் சேதுபதி.

காசு, பணம், துட்டு...

காசு, பணம், துட்டு...

அவருக்கு அருகே மயில் சாமரம் பிடித்தபடி இருவர் நிற்கின்றனர். விஜய் சேதுபது ராஜாவுக்குரிய கெட்டப்பில் உடல் முழுவதும் நகைகளுடன் காட்சி தருகிறார்.

டிசம்பர் ரிலீஸ்...

டிசம்பர் ரிலீஸ்...

பிஜு விஸ்வநாத் படத்தை இயக்கியிருப்பதுடன் ஒளிப்பதிவும் செய்துள்ளார். இப்படம் வரும் டிசம்பர் மாதம் ரிலீசாகும் எனத் தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X