விஜய் சேதுபதிக்கு குவியும் பல மொழி வாய்ப்புக்கள்...காரணம் இது தான்

சென்னை : கணவர் பெயர் ராணாதுரைசிங்கம், மாஸ்டர், உப்பனா என கடைசியாக விஜய் சேதுபதி நடித்த 3 படங்களுமே பிளாக்பஸ்டர் படங்களாக அமைந்து விட்டன. இந்த படங்களில் துணை நடிகர், சிறிய ரோல், வில்லன் என்ற வேடங்களிலேயே விஜய் சேதுபதி நடித்திருந்தாலும் ரசிகர்களிடம் இவரின் கேரக்டர் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனால் பல மொழிகளிலும் வரவேற்கப்படும் நடிகராக மாறி விட்டார் விஜய் சேதுபதி. தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் 6 படங்களில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தம் ஆகி உள்ளார். இவர் ஹீரோவாக மட்டுமின்றி பலவிதமான ரோல்களிலும் நடித்து வருகிறார்.

விடுதலையில் இணைந்த விஜய் சேதுபதி

விடுதலையில் இணைந்த விஜய் சேதுபதி

சமீபத்தில், வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி ஹீரோவாக நடிக்கும் விடுதலை படத்தில் விஜய் சேதுபதியும் நடிக்கிறார் என கூறப்பட்டது. இந்த படத்தில் ஃபஸ்ட்லுக் போஸ்டரும் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. இது அனைவரையம் கவருவதாக இருந்தது.

பான் இந்தியன் படமாகும் விடுதலை

பான் இந்தியன் படமாகும் விடுதலை

இதை பான் இந்தியன் படமாக மாற்ற நினைத்துள்ள படக்குழு அனைத்து மொழிகளிலும் இப்படத்தை ப்ரோமோட் செய்து வருகிறது. தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

விஜய் சேதுபதி – வெற்றிமாறன் கூட்டணி

விஜய் சேதுபதி – வெற்றிமாறன் கூட்டணி

அசுரன் படத்திற்காக சிறந்த டைரக்டர் விருதினை பெற்ற பிறகு நாடு முழுவதும் வெற்றிமாறனுக்கு பெரிய அளவில் பெயர் கிடைத்துள்ளது. கவனிக்கப்படும் டைரக்டராகவும் மாறி விட்டார். இவரும், விஜய் சேதுபதியும் விடுதலை படத்தில் இணைந்துள்ளது இப்படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. எலைட் குமார் இந்த படத்தை தயாரிக்கிறார்.

Recommended Video

Vivekh படம் போட்ட Postal Stamp | மத்திய அரசின் புது முயற்சி | PM Modi
விஜய் சேதுபதிக்கு குவியும் வாய்ப்புக்கள்

விஜய் சேதுபதிக்கு குவியும் வாய்ப்புக்கள்

விடுதலை படத்தில் விஜய் சேதுபதி சிறிய ரோலில் மட்டுமே நடிக்கிறாராம். இருந்தாலும் இது பலமான கேரக்டராம். சிறிய கேரக்டர் என்றாலும் பலமான கேரக்டர் என்பதால் தான் விஜய் சேதுபதியும் நோ சொல்லாமல், ஓகே சொல்லி விடுகிறாராம். பல மொழிகளிலும் விஜய் சேதுபதிக்கு வாய்ப்பு குவிந்து வருவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X