விஜய் சேதுபதி பட டைரக்டருக்கு காஸ்ட்லி பரிசு தந்த தயாரிப்பாளர்கள்

சென்னை : 2021 ம் ஆண்டு விஜய் சேதுபதிக்கு சிறப்பான ஆண்டாக துவங்கி உள்ளது என்றே சொல்லலாம். விஜய்யுடன் அவர் இணைந்து நடித்த மாஸ்டர் படம், வைஷ்ணவ் தேஜ் உடன் இணைந்து நடித்த உப்பனா படமும் மிகப் பெரிய பிளாக் பஸ்டர் படங்களாக அமைந்து விட்டன. இந்த இரண்டு படங்களிலுமே விஜய் சேதுபதி, வில்லன் கேரக்டரில் தான் நடித்துள்ளார்.

டைரக்டர் புஜ்ஜி பாபு சானாவின் முதல் படமான உப்பனா, காதல் மற்றும் ஜாதி பிரச்சினையை மையமாகக் கொண்ட படம். அதனால் இது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.வைஷ்ணவ தேஜ் மற்றும் கீர்த்தி ஷெட்டி இதில் காதலர்களாகவும், விஜய் சேதுபதி ஜாதியில் தீவிரமாக இருப்பவராகவும் நடத்திருந்தனர்.

Vijay Sethupathis recent blockbuster movie director gets a masssive gift from producers

உப்பனா படத்தை நவீன் யர்னினி, ரவி ஷங்கர், சுகுமார் ஆகியோர் தயாரித்திருந்தனர். இந்த படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து டைரக்டர் புஜ்ஜி பாபுவிற்கு, ரூ.75 லட்சம் மதிப்பிலான பென்ஸ் காரை தயாரிப்பாளர்கள் பரிசாக அளித்துள்ளனர்.

இந்த புதிய காரில் சுகுமாருடன், புஜ்ஜி பாபு சென்ற போட்டோக்களை அவர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். உப்பனா படம் வசூலை வாரி குவித்து வருவதால் மகிழ்ந்து போன தயாரிப்பாளர்கள் இந்த காஸ்ட்லி பரிசை டைரக்டருக்கு வழங்கி உள்ளதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X