பாலிவுட்டில் 'தமிழன்'டான்னு மார் தட்டப் போகும் விஜய் சேதுபதி?

By Siva

மும்பை:விஜய் சேதுபதி ஆமீர் கானுடன் சேர்ந்து நடிக்கும் படத்தில் அவரின் கதாபாத்திரம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதி தமிழிலேயே சரியாக மூச்சு விடக் கூட நேரம் இல்லாமல் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடிக்க ஒப்புக் கொண்டு வருகிறார்.

Vijay Sethupathis role in Aamir Khans movie revealed

அது போதாது என்று பாலிவுட்டிலும் அறிமுகம் ஆகிறார் விஜய் சேதுபதி. அதுவும் நடிப்புக்கு பெயர் போன ஆமீர் கான் படம் மூலம் பாலிவுட் செல்கிறார் விஜய் சேதுபதி. டாம் ஹான்க்ஸ் நடிப்பில் வெளியான ஃபாரஸ்ட் கம்ப் ஹாலிவுட் படத்தை இந்தியில் ரீமேக் செய்கிறார்கள்.

அந்த ரீமேக்கில் ஃபாரஸ்ட் கம்பாக நடிக்கிறார் ஆமீர். அவரின் நண்பராக விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். இந்த படத்திற்காக ஆமீர் கான் தனது உடல் எடையை வெகுவாக குறைத்துக் கொண்டிருக்கிறார். உடல் எடையை ஏற்றி இறக்குவது ஆமீர் கானுக்கு கை வந்த கலையாகும்.

ஃபாரஸ்ட் கம்ப் படத்தின் கதையில் சில மாற்றம் செய்கிறார்களாம். விஜய் சேதுபதி ஒரு தமிழனாக நடிக்க உள்ளாராம். ஆனாலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.

பாலிவுட் படத்தில் ஒரு தமிழனை தமிழனாக நடிக்க வைப்பது பாராட்டுக்குரியது. லால் சிங் சட்டா என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை அத்வைத் இயக்குகிறார். ஆமீர் கான், ஜாய்ரா வாசிம் நடித்த சீக்ரெட் சூப்பர் ஸ்டார் படத்தை இயக்கியவர் இந்த அத்வைத்.

லால் சிங் சட்டா படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. படப்பிடிப்பு விரைவில் துவங்கும். விஜய் சேதுபதியை ஆமீர் கானுடன் சேர்ந்து பார்க்க மிகவும் ஆவலாக உள்ளனர் ரசிகர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X