முதல்முறையாக டபுள் ஆக்ஷன்.. விஜய்சேதுபதியின் சங்கத்தமிழன் நாளை ரிலீஸ்!
சென்னை: விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய்சேதுபதி முதல்முறையாக டபுள் ஆக்ஷன் ரோலில் அசத்தவுள்ள சங்கத்தமிழன் படம் நாளை வெளியாகிறது.
விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள சங்கத்தமிழன் படம் தீபாவளி ரேசில் கலந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சில பல காரணங்களால் ரிலீஸ் தேதி தள்ளிப்போய் நாளை வெளியாகிறது.
சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள ஆக்ஷன் திரைப்படத்துடன் விஜய்சேதுபதியின் சங்கத்தமிழன் நாளை மோதுகிறது.

டபுள் ஆக்ஷன்
ஹீரோ, வில்லன், நட்புக்காக என பல பரிமாணங்களில் தலை காட்டிய நடிகர் விஜய் சேதுபதி முதல் முறையாக சங்கத்தமிழன் படத்தில் டபுள் ஆக்ஷனில் நடித்துள்ளார். விஜய் சந்தர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில், சங்கமித்ரன் மற்றும் தமிழரசன் என்று டபுள் ரோலில் நடித்துள்ளார். ஆக்ஷன் மற்றும் மாஸ் என்டர்டெயினர் படமாக சங்கத்தமிழன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டபுள் ஹீரோயின்
விஜய் சேதுபதி இரு வேடங்களில் நடிப்பதால், சங்கத்தமிழன் படத்தில் இரண்டு முன்னணி நாயகிகள் நடித்துள்ளனர். அடங்கமறு, அயோக்யா படங்களில் நடித்த ராஷி கண்ணா மற்றும் டிக் டிக் டிக், ஒரு நாள் கூத்து படங்களில் நடித்த நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளனர். கிராமத்து விவசாயி வேடத்தில் நடிக்கும் தமிழரசனுக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் கிராமத்து பெண் வேடத்தில் நடித்துள்ளார். ராஷி கண்ணாவுக்கு கொஞ்சம் மாடர்ன் அவதாரம்.

மோதல்
தீபாவளி ரேசில் விஜய்யின் பிகில் மற்றும் கார்த்தியின் கைதி படங்களுடன் மோத வேண்டிய சங்கத்தமிழன் திரைப்படம், நாளை வெளியாகும் விஷாலின் ஆக்ஷன் படத்துடன் நேரடியாக மோதுகிறது. தீபாவளி ரிலீசுக்கு பிறகு தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்களின் படங்கள் வெளிவராத நிலையில், நாளை இரு பெரும் நடிகர்களின் படங்கள் மோதுகின்றன.

யார் ஜெயிப்பா?
தீபாவளி ரேசில் மோதிய விஜய்யின் பிகில் படம் 300 கோடி வசூலையும், கார்த்தியின் கைதி படம் 100 கோடி வசூலையும் பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றன. அதேபோல், நாளைய போட்டியில் விஜய்சேதுபதியின் சங்கத்தமிழன் மற்றும் விஷாலின் ஆக்ஷன் என இரு படங்களும் நல்ல வசூலை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











