மிரட்டலான போலீஸ்... சிறப்பான குடும்பத்தலைவன்... 6 வருடங்களை கடந்த சேதுபதி
சென்னை : நடிகர் விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் பீட்சா படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக இணைந்து நடித்த படம் சேதுபதி.
Recommended Video
இந்தப் படம் கடந்த 2016ல் வெளியாகி விஜய் சேதுபதிக்கு கமர்ஷியல் அந்தஸ்தை கொடுத்தது.
தற்போது இந்தப் படம் வெளியாகி 6 ஆண்டுகளை கடந்துள்ளது.

சேதுபதி படம்
நடிகர் விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன், மாஸ்டர் ராகவன், வேல ராமமூர்த்தி உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 2016ல் வெளியான படம் சேதுபதி. இந்தப் படத்தில் போலீஸ் அதிகாரியாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். அந்த கேரக்டருக்கான கம்பீரம், பாடி லாங்குவேஜை அவர் சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார்.

வரவேற்பை பெற்ற பாடல்கள்
அருண்குமார் எழுதி இயக்கியிருந்த இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார் நிவாஸ் கே பிரசன்னா. படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றிருந்தன. தன்னுடைய சக காவலரின் கொலையில் துப்பறியும் அதிகாரியாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். தொடர்ந்து அவருக்கும் வில்லனுக்கும் இடையில் ஏற்படும் ட்விஸ்ட்களை கதைக்களமாக அமைத்திருந்தார் இயக்குநர்.

இயல்பான குடும்பத்தலைவன்
படத்தில் விஜய் சேதுபதி மற்றும் ரம்யா நம்பீசன் இடையிலான கெமிஸ்ட்ரி பேசப்பட்டது. இயல்பான குடும்பத்தலைவன் தனது மனைவி மீது செலுத்தும் அன்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார் விஜய் சேதுபதி. அதற்கு ஈடுகொடுத்து நடித்திருந்தார் ரம்யா நம்பீசன். படத்தில் அவர்களது குழந்தைகளாக நடித்திருந்தவர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.

த்ரில்லர் படம்
சிறப்பான த்ரில்லர் மற்றும் குடும்ப சென்டிமெண்ட் கலந்து இந்தப் படம் வெளியானது. தமிழில் போலீசாக முன்னணி நடிகர்கள் நடிப்பில் வெளிவந்த படங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டு எந்தவிதமான பஞ்ச டயலாக்கும் இல்லாமல் இயல்பாக இந்தப் படம் வெளியானது. அதுவே சிறப்பான அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுக்கும் வகையில் இருந்தது.

சிறப்பான திரைக்கதை
மேலும் படத்தின் திரைக்கதையும் படத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் அமைந்தது. தொடர்ந்து சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துவரும் விஜய் சேதுபதிக்கு பெருமை சேர்க்கும் வகையில் இந்தப் படமும் அமைந்தது. இதனிடையே படத்தில் வாத்தியாராக நடித்திருந்த வேல ராமமூர்த்திக்கும் இந்தப் படம் வரவேற்பை பெற்றுத் தந்தது.

6 ஆண்டு கொண்டாட்டம்
இந்நிலையில் இந்தப் படம் வெளியாகி தற்போது 6 ஆண்டுகளை கடந்துள்ளது. இதையொட்டி படக்குழுவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் தங்களது ட்விட்டர் பக்கத்தில் படத்தை நினைவு கூர்ந்துள்ளனர். விஜய் சேதுபதி படத்தின் மிரட்டலான போஸ்டருடன் சேதுபதியின் 6 ஆண்டு கொண்டாட்டத்தை பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











