தெலுங்கு பேசப்போகும் சேதுபதி, விஜய் சேதுபதி வேடத்தில் வெங்கடேஷ்?
ஹைதராபாத்: சமீபத்தில் வெளியான சேதுபதி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகர் வெங்கடேஷ் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த பிப்ரவரி 19 ம் தேதி வெளியான சேதுபதி திரைப்படம் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் சேதுபதி படத்தின் தெலுங்கு உரிமையை முன்னணி தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவர் கைப்பற்றி உள்ளதாகவும், அதில் வெங்கடேஷ் நடிக்க ஆர்வம் காட்டுவதாகவும் டோலிவுட் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.
தற்போது தமிழில் வெளியாகி வெற்றிபெற்ற இறுதிச்சுற்று படத்தின் தமிழ் ரீமேக்கில் வெங்கடேஷ் நடிக்கவுள்ளார். மேலும் சேதுபதி படத்தின் ரீமேக்கிலும் அவர் விஜய் சேதுபதி வேடத்தில் நடிக்க ஆர்வம் காட்டுவதாக கூறுகின்றனர்.
விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சேதுபதி வெளியான முதல் வாரத்தில் 3.5 கோடிகளைக் குவித்தது. மேலும் படத்திற்கு கிடைத்த நேர்மறையான விமர்சனங்களால் தொடர்ந்து வசூலைக் குவித்து வருகிறார் விஜய் 'சேதுபதி'.
'பண்ணையாரும், பத்மினியும்' என்று தமிழ் சினிமாவிற்கு ஒரு தரமான படத்தை அளித்த இயக்குநர் அருண்குமாரின் 2 வது படம் சேதுபதி என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











