Just In
- 1 hr ago
அர்ச்சனாவை பார்த்தாலே பிடிக்கல.. பிக்பாஸ் பிரபலம் பகிர்ந்த போட்டோ.. காண்டாகும் நெட்டிசன்ஸ்!
- 2 hrs ago
கப்பை தட்டிய ஆரி.. தில்லாய் டிவிட்டிய அனிதா சம்பத்.. பார்த்து ஆறுதல் கூறும் ஃபேன்ஸ்!
- 2 hrs ago
இன்னும் ஒரு ஷாட்டுக்குத்தான் வெயிட்டிங்.. கேரவனில் கிரிக்கெட் பார்த்த சதீஷ், பிரியா பவானி சங்கர்!
- 2 hrs ago
விரைவில் அறிவிப்பு வருமாம்.. ஹீரோயின் ஆகிறார் ஶ்ரீதேவியின் 2 வது மகள்.. போனிகபூர் தகவல்!
Don't Miss!
- Finance
கூகுள்-ஐ தோற்கடித்த போன்பே.. மாஸ்காட்டும் இந்திய நிறுவனம்..!
- News
விருந்து இல்லை;விழா இல்லை... எல்லா நாளும் அன்பும்-தொண்டும்... இது தியாகச்சுடர் சாந்தாவின் கதை..!
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Automobiles
மீண்டும் ஒரு முறை கேமரா கண்களில் சிக்கிய புதிய கிளாசிக் 350... எதிர்பார்ப்பை எகிற வைக்கும் எக்ஸாஸ்ட்...
- Lifestyle
'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அடக்கடவுளே.. இதுக்காகத் தான் விஜய்சேதுபதியும், அவர் மகனும் அடிச்சிக்கிட்டாங்களா?

சென்னை: விஜய் சேதுபதி நடிக்கும் சிந்துபாத் படத்தில் அவரது கதாபாத்திரம் என்ன, படத்தின் கதை என்ன என்பது தெரியவந்துள்ளது.
பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி ஆகிய இரண்டு படங்களை தொடர்ந்து, எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் மூன்றாவது படம் சிந்துபாத். இந்த படத்தை கே புரோடக்ஷன்ஸ் சார்பில் ராஜராஜன் மற்றும் வான்சன் மூவிஸ் ஷான் சுதர்ஷன் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.
இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, இப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிறார்.
ஒரு எளிய மனிதன் ஒரு எளிய வாழ்வை வாழ இந்த சமூகம் எவ்வளவு பெரிய தடையாக உள்ளது என்பதையும், அதற்கு தீர்க்கமான தீர்வையும் பேசும் படமாக சிந்துபாத் உருவாகியுள்ளது.
உடைக்கு பதிலாக கொசு வலையை அணிந்திருக்கிறீர்களே: நடிகையை விளாசிய ரசிகர்கள்

திருடர்கள்:
சிந்துபாத் படத்தில் விஜய் சேதுபதியும், அவரது மகன் சூர்யாவும் தென்காசி பகுதியில் சின்ன சின்ன திருட்டு வேலைகள் செய்யும் திருடர்களாக நடித்துள்ளனர். படம் முழுவதும் வரும் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார். எனவே இது அவருக்கு நல்ல அறிமுக படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறுது.

அஞ்சலி கேரக்டர்:
இந்த படத்தில் அஞ்சலியின் கதாபாத்திரம் மிகவும் வலிமை வாய்ந்தது எனக் கூறப்படுகிறது. எனவே இப்படத்தில் அஞ்சலியின் நடிப்பு பெரிதும் பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அஞ்சலிக்கும் விஜய் சேதுபதிக்குமான காதல் காட்சிகள் மிக சுவாரஸ்யமாக அமைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

வில்லன் லிங்கா:
சேதுபதி படத்தில் உதவி ஆய்வாளராக நடித்த லிங்கா, இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இதற்காக அவர் தாய்லாந்து சென்று, கடந்த ஒரு வருடமாக கஷ்டப்பட்டு 18 கிலோ எடை கூட்டியுள்ளார். விவேக் பிரசன்னா, இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நகைச்சுவை பொறுப்பை ஜார்ஜ் ஏற்றுள்ளார்.

வெளிநாட்டில் படப்பிடிப்பு:
தென்காசி, மலேசியா, தாய்லாந்து என மூன்று இடங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது. படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரோடக்ஷ்ன் வேலைகள் நடைபெற்று வருகின்றன. மலேசியா, தாய்லாந்தில் எடுக்கப்பட்ட காட்சிகளின் டப்பிங் வேலைகளுக்காக, இயக்குனர் அந்நாடுகளுக்கு சென்றுள்ளார்.

கோடை ரிலீஸ்:
விரைவில் போஸ்ட் புரொடக்சன் பணிகள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து வேலைகளையும் விறுவிறுப்பாக செயல்பட்டு முடித்து, வரும் கோடை விடுமுறையில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.