வாரிசை களமிறக்கும் விஜய் சேதுபதி : வெற்றிமாறனின் விடுதலை படத்தில் இணையும் விஜய் சேதுபதி மகன் சூர்யா?

சென்னை: நடைகர் விஜய் சேதுபதி பல்வேறு வித்யாசமான வேடங்களில் நடித்து வருகிறார். ஹீரோவாக நடிப்பேன் என்கிற மரபை உடைத்து வில்லன், சிறிய பாத்திரங்களிலும் நடிக்கிறார்.

சமீபத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்த விக்ரம் படம் பெரிதாக பேசப்பட்டது. என்ன வேடம் என்றால் என்ன? உங்களுடன் நான் நடிக்க வேண்டும் என்கிற கனவு நிறைவேறியது என விஜய் சேதுபது கமல்ஹாசனிடம் தெரிவித்தார்.

விக்ரம் வெளியான சில வாரங்களில் அவர் கதாநாயகனாக நடித்த மாமனிதன் படம் வெளியானது. இந்தப்படம் விஜய் சேதுபதிக்கு நல்ல பெயரை வாங்கித்தந்துள்ளது.

Vijay Sethupathi’s son to act Vetrimaaran Vidutthalai film

மிரட்டும் கூட்டணி

சூரி காவலர் தோற்றத்திலும் விஜய் சேதுபதி கையில் விலங்குடனும் வெளியான 'விடுதலை' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு ரசிகர்கள் கிட்ட நல்லாவே வரவேற்பு கிடைச்சிருந்துச்சு. சூரி, விஜய் சேதுபதி தவிர பவானி ஸ்ரீ, கெளதம் வாசுதேவ், பிரகாஷ் ராஜ் என வெயிட்டான காம்போவில் தயாராகும் இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இப்படி தாறுமாறான கூட்டணில ரீலீஸாகப் போற 'விடுதலை' கண்டிப்பா ப்ளாக் பஸ்டர் லிஸ்ட்ல இணயும்ன்னு எதிர்பார்க்கப்படுது.

சிந்துபாத் டூ விடுதலை

ரசிகர்கள் 'விடுதலை' படத்தோட ரிலீஸ் எப்போன்னு வெயிட்டிங்ல இருக்க, இப்போ புதுசா கிடைச்ச அப்டேட் ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்டா அமைஞ்சிருக்கு. விஜய் சேதுபதி கூட 'சிந்துபாத்' படத்துல அறிமுகமான அவரோட மகன் சூர்யா, 'விடுதலை' மூவிலயும் முக்கியமான ரோல் பண்ணப் போறாராம். குறிப்பா பழங்குடியின சிறுவனா சூர்யா நடிக்க இருக்குறதா சொல்லப்படுது. 'அசுரன்' படத்துல கருணாஸோட மகன் கென் கருணாஸ்க்கு முக்கியமான ரோல் கொடுத்த வெற்றிமாறன், விஜய் சேதுபதியோட மகன் சூர்யாவுக்கும் சூப்பரான ப்ரேக் கொடுப்பார்ன்னு, ரசிகர்களாம் அடிச்சு சொல்றாங்க.

ஒருவேளை இப்படி இருக்குமோ?

'விடுதலை' படத்தோட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ல விஜய் சேதுபதியோட லுக், பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர் மாதிரி தான் இருந்துச்சு. இதெல்லாம் வச்சு பார்க்கும் போது விஜய் சேதுபதியோட மகனாகவே அவரோட உண்மையான பையன் சூர்யா நடிக்கலாம்ன்னு எதிர்பார்க்கப்படுது. இந்த அப்டேட் மட்டும் உண்மையா இருந்துச்சுன்னா, அப்பா விஜய் சேதுபதிக்கும், மகன் சூர்யாவுக்கும் ஸ்க்ரீன்ல செம்ம போட்டி நடக்கும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X