அனுமதி கிடைச்சா.. 40 நாள் தான் பாக்கி.. ஒரே மூச்சில் எடுக்க தயாராக இருக்கும் விஜய்சேதுபதி படம்!
சென்னை: மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் அந்த அரசியல் படத்துக்கு இன்னும் 40 நாட்கள் ஷூட்டிங் மட்டுமே பாக்கியாம்.
Recommended Video
லாக்டவுன் காரணமாக படப்பிடிப்புகள் எல்லாம் உலகளவில் நிறுத்தப்பட்டு இருக்கின்றன.
லாக்டவுன் 4.0 சில தளர்வுகளுடன் வந்துள்ள நிலையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கு அனுமதி கிடைத்திருக்கிறது.

சின்னத்திரை ஷூட்டிங்
நடிகை குஷ்பு உள்ளிட்டோர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்துள்ள நிலையில், டிவி சீரியல் ஷூட்டிங்கை நடத்த அனுமதி அளித்திருக்கிறது மாநில அரசு. பாதுகாப்புடனும் சமூக இடை வெளி விட்டும், குறைந்த ஆட்களை கொண்டு இன் டோர் ஷூட்டிங் மட்டுமே நடத்த வேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மாஸ்டருக்கு வெயிட்டிங்
விஜய், விஜய்சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள மாஸ்டர் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கின்றன. தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் டீசர் அல்லது டிரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசியல் படம்
விஜய்சேதுபதி வில்லனாக நடித்துள்ள மாஸ்டர் படம் தியேட்டர் ரிலீசுக்கு காத்திருக்கும் நிலையில், விஜய்சேதுபதியின் அரசியல் படமான 'துக்ளக் தர்பார்' படத்துக்கு இன்னும் 40 நாட்கள் ஷூட்டிங் மட்டுமே பாக்கி இருக்கின்றதாம். லாக்டவுனுக்கு முன்னதாக 35 நாட்கள் ஷூட்டிங் முடிந்துள்ளதாக தயாரிப்பு தரப்பு அண்மையில் அறிவித்து இருக்கிறது.

இவர்தான் ஜோடி
அறிமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாள் இயக்கத்தில் அரசியல் படமாக உருவாகி வரும் துக்ளக் தர்பார் படத்தில் நடிகர் பார்த்திபன் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். கருணாகரன் இடம்பெற்றிருக்கிறார். மணிரத்னத்தின் காற்று வெளியிடை, செக்கச் சிவந்த வானம் மற்றும் மிஷ்கினின் சைக்கோ படங்களில் நடித்த அதிதி ராவ் இந்த படத்தில் விஜய்சேதுபதியுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.

அனுமதி கிடைக்குமா
சின்னத்திரை சீரியல்கள் ஷூட்டிங்கிற்கு அனுமதி கிடைத்தது போல, சினிமா படப்பிடிப்புகளுக்கான ஷூட்டிங்கிற்கும் அனுமதி கிடைத்தால், உரிய பாதுகாப்பு மற்றும் அரசு கூறும் அறிவுரைகளை ஏற்று ஷூட்டிங் நடத்த பலரும் தயாராக இருக்கின்றனர். துக்ளக் தர்பார் படக் குழுவுக்கு அப்படியொரு வாய்ப்பு கிடைத்தால் ஒரே மூச்சில் ஷூட்டை முடிக்கவும் தயாராம்.


Click it and Unblock the Notifications











