டபுள் ட்ரீட்.. விஜய்சேதுபதியின் ’துக்ளக் தர்பார்’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்.. பிரபலங்கள் பாராட்டு!

சென்னை: மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் 'துக்ளக் தர்பார்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாள் இயக்கத்தில் விஜய்சேதுபதி, அதிதி ராவ், மஞ்சிமா மோகன், காயத்ரி மற்றும் பார்த்திபன் நடிப்பில் உருவாகி உள்ள அரசியல் சட்டயர் படம் தான் துக்ளக் தர்பார்.

செவன் ஸ்க்ரீன் லலித் குமார் தயாரிப்பில் இந்த படம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

துக்ளக் தர்பார்

துக்ளக் தர்பார்

நடிகர் விஜய்சேதுபதியின் அட்டகாசமான நடிப்பில் உருவாகி வரும் துக்ளக் தர்பார் படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. மிரர் எஃபெக்ட்டில், இரு வேறு கெட்டப்பில் நடிகர் விஜய் சேதுபதி மட்டுமே போஸ்டர் முழுவதும் நிறைந்திருக்கிறார். தங்கத்தால் ஜொலிப்பது போல, ஃபர்ஸ்ட் லுக்கே மின்னுகிறது.

மூன்று ஹீரோயின்கள்

மூன்று ஹீரோயின்கள்

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், மெல்லிசை, சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ் என பல படங்களில் விஜய்சேதுபதி உடன் இணைந்து நடித்துள்ள காயத்ரி, செக்கச் சிவந்த வானம் படத்தில் இணைந்து நடித்த அதிதி ராவ் மற்றும் நடிகை மஞ்சிமா மோகன் என இந்த படத்தில் மூன்று ஹீரோயின்கள் நடித்துள்ளனர்.

மீண்டும் பார்த்திபன்

மீண்டும் பார்த்திபன்

விஜய்சேதுபதியின் நானும் ரவுடி தான் படத்தில் சூப்பர் வில்லனாக நடித்த பார்த்திபன், தற்போது மீண்டும் விஜய்சேதுபதி உடன் இந்த படத்தில் கை கோர்த்துள்ளார். அரசியல் நைய்யாண்டி படம் என்பதால், பார்த்திபனின் நடிப்பு பற்றி சொல்லவே தேவையில்லை, வேற லெவலில் ரகளை இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

டபுள் வெற்றி

டபுள் வெற்றி

"நண்பர் விஜய் சேதுபதிக்கு DOUBLE வெற்றியாகவும்,நாணயமிக்க லலித் அவர்களுக்கு மிக்க நாணயங்களும், இயக்குனருக்கு கோடிகள் கூடுதலாகவும்,(இச்சமயத்தில் குறைக்கச் சொல்லி சங்கங்கள் சொல் மீறியும்)உடன் நடிப்போரும் பேரும் பெற வாழ்த்துக்கள்!" என நடிகர் பார்த்திபன் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

Recommended Video

Suriya Vs Vijay தமிழ் சினிமா துறை • Respect Women
டிரெண்டிங்

டிரெண்டிங்

#TughlaqDurbarFirstLook, #VijaySethupathi, #MakkalSelvan என மூன்று ஹாஷ்டேக்குகள் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் ஆனதை தொடர்ந்து விஜய்சேதுபதி ரசிகர்களால் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. மாஸ்டர் படத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ள நிலையில், விஜய் ரசிகர்களும் இந்த ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருவதில் தங்கள் பங்கையும் ஆற்றி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X