For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  விஜய் சேதுபதியில் துக்ளக் தர்பார் லிரிக்கல் வீடியோ வெளியானது

  |

  சென்னை : கோலிவுட்டில் ஒரே நேரத்தில் 12 க்கும் மேற்பட்ட படங்களை கையில் வைத்து, படுபிஸியாக நடித்து வரும் நடிகர் யார் என்றால் அது விஜய் சேதுபதி தான். யதார்த்தமான ஹீரோ, அசால்ட்டான வில்லன் என பல விதமான கேரக்டர்களில் நடித்து ரசிகர்களை அசத்தி வருகிறார்.

  காமெடி ஹீரோ, மிரட்டல் ஆக்ஷன், சீரியஸ் வில்லன் என ஒரே சமயத்தில் படத்திற்கு படம் வித்தியாசம் காட்டுவதாலும், தனக்கு பொருத்தமான கதைகளை தேர்வு செய்து நடிப்பதாலும் விஜய் சேதுபதியை ரசிகர்கள், மக்கள் செல்வன் என கூப்பிட்டு வருகின்றன. அப்படி நடித்து வரும் படங்களில் ஒன்று தான் துக்ளக் தர்பார்.

  மூன்றரை வயது குழந்தை ஜெசிக்காவிற்கு இதய நோய்... உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள்

  விஜய் சேதுபதி, ராஷ் கண்ணா லீட் ரோலில் நடிக்கும் படம் துக்ளக் தர்பார். இந்த படத்தை டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கி வருகிறார். அரசியல் த்ரில்லர் படமாக இது உருவாகி வருகிறது. படத்தின் டைட்டில், ஃபஸ்ட்லுக் என அனைத்தும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து வருகின்றன.

  விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் நேரடியாக தொலைக்காட்சியில்... ரிலீஸ் தேதி வெளியானது! விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் நேரடியாக தொலைக்காட்சியில்... ரிலீஸ் தேதி வெளியானது!

  மீண்டும் பார்த்திபனுடன் கூட்டணி

  மீண்டும் பார்த்திபனுடன் கூட்டணி

  இந்த படத்தில் பார்த்திபன் மிக முக்கிய ரோலில் நடித்துள்ளார். நானும் ரவுடி தான் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு விஜய் சேதுபதியும், பார்த்திபனும் இணைந்து நடித்துள்ள படம் இது. இவர்களுடன் மஞ்சிமா மோகன், கருணாகரன், பகவதி பெருமாள் உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

  மாற்றப்பட்ட ஹீரோயின்

  மாற்றப்பட்ட ஹீரோயின்

  செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ பேனரில் லலித் குமார் இந்த படத்தை தயாரித்துள்ளார். முதலில் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க அதிதி ராவ் ஹைதரியிடம் தான் கேட்கப்பட்டுள்ளது. ஆனால் தேதி ஒத்து வராததால் பிறகு அவருக்கு பதில் ராஷி கண்ணாவை நடிக்க வைத்துள்ளனர்.

  லிரிக்கல் பாடல் ரிலீஸ்

  இந்நிலையில் படத்தின் லிரிக்கல் வீடியோக்களை படக்குழு நேற்று வெளியிட்டுள்ளது. ஆடியோ ஜூக் பாக்ஸ் இதனை வெளியிட்டுள்ளது. அரசியல் கேடி, திராவிட கோனே, காமி காமி, அண்ணாத்த சேதி ஆகிய 4 தலைப்புகளில் இந்த பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசை அமைத்துள்ளார்.

  சன் டிவி.,யில் ரிலீஸ்

  சன் டிவி.,யில் ரிலீஸ்

  சமீபத்தில் தான் இந்த படம் தியேட்டரில் ரிலீஸ் செய்யப்படாது, விநாயகர் சதுர்த்தி அன்று நேரடியாக டிவி.,யில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக படக்குழு அறிவித்தது. அதாவது செப்டம்பர் 10 ம் தேதி சன் டிவி.,யில் இந்த படம் நேரடியாக வெளியிடப்பட உள்ளதாம்.

  ஓடிடி.,யிலும் ரிலீசாகிறது

  ஓடிடி.,யிலும் ரிலீசாகிறது

  முதலில் துக்ளக் தர்பார் படத்தை டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியிடத் தான் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது வெளியாகி உள்ள தகவலின் படி முதலில் டிவியில் வெளியிட்டு விட்டு, பிறகு நெட்ஃபிளிக்சில் வெளியிட பட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனராம்.

  இது முதல் முறையல்ல

  இது முதல் முறையல்ல

  இதற்கு முன் விஜய் சேதுபதி நடித்த கணவர் பெயர் ராணாசிங்கம் படமும் கடந்த ஆண்டு ஜீ 5 ல் தான் வெளியிடப்பட்டது. இது மட்டுமல்ல துக்ளக் தர்பாரை தொடர்ந்து விஜய் சேதுபதி அடுத்தடுத்து நடித்து முடித்து, ரிலீசுக்கு தயாராக உள்ள கடைசி விவசாயி, லாபம், யாதும் ஊரே யாவரும் கேளீர் போன்ற படங்களையும் ஓடிடி.,யிலேயே ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. விஜய் சேதுபதி நடித்துள்ள நவரசாவும் நெட்ஃபிளிக்சில் தான் வெளியிடப்பட்டுள்ளது.

  Recommended Video

  Master Chef Tamil கொஞ்சம் புதுசா இருக்கும் | Mr. Clement Exclusive | #closecall |Filmibeat Tamil
   சன் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர்

  சன் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர்

  ஏற்கனவே விஜய் சேதுபதி டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராக மாஸ்டர் செஃப் என்ற பிரபலமான சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியும் சன் டிவி.,யில் தான் வார இறுதி நாட்களில் ஒளிபரப்பாகி வருகிறது. இதனால் சன் டிவி ரசிகர்கள் மத்தியில் விஜய் சேதுபதி அழுத்தமான இடத்தை பிடித்து வைத்துள்ளார். இந்நிலையில் அவர் நடித்துள்ள துக்ளக் தர்பார் படமும் சன் டிவி.,யில் வெளியிடப்பட உள்ளது படத்திற்கு ப்ளஸாகவே பார்க்கப்படுகிறது.

  English summary
  Vijay sethupathi and Raasi kanna played lead role in tughlaq durbar movie. lyrical song album of this movie released yesterday by film makers in audio jukebox. recently makers announced that this movie to skip theatrical release and directly premier on sun tv.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X