அட்டகாசம் தான் போங்க.. விநாயகர் சதுர்த்திக்கு நேரடியா சன் டிவியில் வெளியாகும் விஜய்சேதுபதி படம்!
சென்னை: ஒடிடி தளத்திற்கு ஓப்பன் போட்டியாக சன் டிவி களமிறங்கி உள்ளது.
சன் டிவியில் மாஸ்டர் செஃப் மூலம் மீண்டும் தொகுப்பாளராக அறிமுகமாக உள்ள விஜய்சேதுபதியின் புதிய படத்தை நேரடியாக சன் டிவியிலேயே வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
வரும் விநாயகர் சதுர்த்திக்கு மக்கள் செல்வன் நடிப்பில் உருவாகி உள்ள துக்ளக் தர்பார் திரைப்படம் சன் டிவியில் நேரடியாக ரிலீசாகிறது.

விஜய்சேதுபதி நடிப்பில்
லாபம், மாமனிதன், கடைசி விவசாயி, யாதும் ஊரே யாவரும் கேளிர், துக்ளக் தர்பார் என ஏகப்பட்ட படங்கள் விஜய்சேதுபதி நடிப்பில் ரிலீசுக்காக காத்திருக்கின்றன. இதில், சில படங்கள் நேரடியாக ஒடிடியில் வெளியாகும் முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன.

ஒடிடியில் பிரச்சனை
இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாள் இயக்கத்தில் விஜய்சேதுபதி, பார்த்திபன், ராஷி கன்னா, காயத்ரி, மஞ்சிமா மோகன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள அரசியல் நய்யாண்டி படமான துக்ளக் தர்பார் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், டிஜிட்டல் உரிமத்தையும் ஹாட்ஸ்டாரே கேட்க ஒடிடி ரிலீஸில் சிக்கல் ஏற்பட்டது.

சன் டிவியில் நேரடியாக
இந்நிலையில், வரும் விநாயகர் சதுர்த்திக்கு சன் டிவியிலேயே நேரடியாக வரும் செப்டம்பர் 19ம் தேதி விஜய்சேதுபதியின் துக்ளக் தர்பார் படம் ரிலீசாக உள்ளதாக அதிரடி அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே வெள்ளை யானை உள்ளிட்ட படங்களை நேரடியாக சன் டிவி ரிலீஸ் செய்துள்ளது.

மாஸ்டர் செஃப்
சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ள பிரம்மாண்ட ரியாலிட்டி ஷோவான மாஸ்டர் செஃப்பை நடிகர் விஜய்சேதுபதி தொகுத்து வழங்குவதால், சன் டிவியிலேயே அவருடைய துக்ளக் தர்பார் படம் நேரடியாக வெளியாக பிசினஸ் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications











