இன்று வெளியாகிறது விஜய் சேதுபதியின் துக்ளக் தர்பார் டீசர்!

சென்னை: விஜய் சேதுபதி, பார்த்திபன், ஆகியோர் நடிப்பில் வெளிவரவுள்ள படம் துக்ளக் தர்பார்.

இந்த படத்தை அறிமுக இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்க, கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில் படத்தின் டீசர் இன்று வெளியாகிறது.

ரசிகர்கள் உற்சாகம்

ரசிகர்கள் உற்சாகம்

பொங்கலுக்கு வெளியாக உள்ள மாஸ்டர் படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். ரசிகர்கள் மாஸ்டர் படத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்க விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் ஒரு முக்கிய காரணம். இந்நிலையில் துக்ளக் தர்பார் டீசர் வெளியாவது விஜய் சேதுபதி ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது.

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

விஜய்சேதுபதியின் பேச்சுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. எப்போதும் அரசியல் சார்ந்த விஷயங்களை பேசுவது மட்டுமன்றி சில நிகழ்வுகளில் கேள்விகளையும் எழுப்புவதுண்டு. இந்த படத்தில் அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் மேலும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

சிறந்த கூட்டணி

சிறந்த கூட்டணி

நானும் ரவுடி தான் படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி - பார்த்திபன் கூட்டணி இந்த படத்தில் இணைந்துள்ளது. இருவரின் வசீகரமான நடிப்பு அந்த படத்தில் பலரின் பாராட்டுகளை பெற்றது. இந்த படம் முழுக்க முழுக்க அரசியல் சார்ந்த கதைக்களம் என்பதால் இந்த கூட்டணி சிறந்த கூட்டணியாக அமையும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பும் கூட.

சன் டிவி - யூ ட்யூப்

சன் டிவி - யூ ட்யூப்

ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரிப்பில் வெளிவரவுள்ள இந்த படத்தின் டீசரை படக்குழு இன்று மதியம் 12:30 மணிக்கு வெளியிட திட்டமிட்டுள்ளது. படத்தின் டீசர் நேரடியாக சன் டிவியின் யூ ட்யூப் சேனலில் வெளியாக உள்ளது. முன்னதாக இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே வைரலானது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X