»   »  ஒரேயொரு ட்வீட் போட்டு ரசிகர்களை கிளீன் போல்டு ஆக்கிய விஜய் சேதுபதி #ONNPS

ஒரேயொரு ட்வீட் போட்டு ரசிகர்களை கிளீன் போல்டு ஆக்கிய விஜய் சேதுபதி #ONNPS

Posted By:
Subscribe to Oneindia Tamil
400 தியேட்டர்களில் வெளியாகும் 'ONNPS'!

சென்னை: விஜய் சேதுபதியின் ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் அவரை நினைத்து பெருமைப்படுகிறார்கள்.

ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி வித்தியாசமாக நடித்துள்ள ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் படம் இன்று ரிலீஸாகியுள்ளது. படத்தை பார்த்தவர்கள் அருமையாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சிலரோ படம் சுமார் தான் என்று ட்வீட்டியுள்ளனர்.

ட்வீட்

உங்களுக்கு அருகில் உள்ள தியேட்டர்களில் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் நாளை ரிலீஸாகிறது. நேரம் இருந்தால் பார்க்கவும். என் அருமை ரசிகர்களின் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி என்று நேற்று ட்வீட்டியுள்ளார் விஜய் சேதுபதி.

ரசிகர்கள்

ரசிகர்கள்

நாளை என் படம் ரிலீஸாகிறது, கண்டிப்பாக பார்க்கவும் என்று கூறுபவர்களுக்கு மத்தியில் நேரம் இருந்தால் பார்க்கவும் என்று கூறியிருக்கிறார் பாருங்க இது தான் மக்கள் செல்வன் என அவரின் ரசிகர்கள் பெருமைப்படுகிறார்கள்.

யாரு சொன்னாங்க?

யாரு சொன்னாங்க?

விஜய் சேதுபதிக்கு ஹேட்டர்களே கிடையாது என்று கூறப்படுகிறது. இதை அறிந்த அவர் என்னை வெறுப்பவர்கள் இல்லை என்று யார் சொன்னது. சமூக வலைதளம் பக்கம் போய் பாருங்க என்று உண்மையே பேசியது அனைவருக்கும் பிடித்திருந்தது.

முத்தம்

முத்தம்

ரசிகர்கள் தன்னுடன் சேர்ந்து புகைப்படம் எடுக்க வந்தால் அவர்களை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கிறார் விஜய் சேதுபதி. இது அவரின் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது.

English summary
Vijay Sethupathi has impressed his fans with a tweet by asking them to watch his ONNPS movie if they have time. He tweeted that, '#ONNPS from tomorrow in theatres near you, watch it if you got time, thanks for all the love and support as always my dear fans Love you all ❤️'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil