25வது படம்.. இன்னும் 25 நாள்தான் இருக்கு.. வைரலாகும் வீடியோ!
சென்னை: சீதக்காதி படம் ரிலீசாக இன்னும் 25 நாட்களே உள்ள நிலையில், விஜய் சேதுபதியில் முந்தைய 24 படங்களின் தொகுப்பாக ஒரு ஜிஃப் வீடியோவை வெளியிட்டுள்ளது படக்குழு.
Recommended Video

சென்னை: சீதக்காதி படம் ரிலீசாக இன்னும் 25 நாட்களே உள்ள நிலையில், விஜய் சேதுபதியின் முந்தைய 24 படங்களின் தொகுப்பாக ஒரு ஜிஃப் வீடியோவை வெளியிட்டுள்ளது படக்குழு.
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் மீண்டும் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் சீதக்காதி. அடுத்தமாதம் 20ம் தேதி இப்படம் ரிலீசாக இருக்கிறது.
ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படம் நடிகா் விஜய் சேதுபதியின் 25வது படமாக உருவாகியுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வைரலானது. சீதக்காதி டிரைலரை 75 பிரபலங்கள் ஒரே நேரத்தில் வெளியிட்டனர்.

இந்நிலையில், விஜய் சேதுபதியின் 25வது படம் என்பதற்கு பெருமை சேர்க்கும் வகையிலும், இப்பட ரிலீசுக்கு இன்னும் 25 நாட்களே உள்ளது என்பதைக் குறிக்கும் வகையிலும் புதிய ஜிஃப் வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
அதில், விஜய் சேதுபதியின் முதல் படமான தென்மேற்குப் பருவக்காற்று முதல் கடைசியாக அவர் நடிப்பில் வெளியான 96 படம் வரையிலான போஸ்டர்கள் தொகுக்கப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications











