twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தமிழில் கதைச்சேன்.. உள்ளே தூக்கி வச்சிட்டாங்க.. வெளியானது யாதும் ஊரே யாவரும் கேளிர் டீசர்!

    |

    சென்னை: இயக்குநர் வெங்கட கிருஷ்ணா ரோகந்த் இயக்கத்தில் விஜய்சேதுபதி, மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகி உள்ள யாதும் ஊரே யாவரும் கேளிர் டீசர் வெளியாகி உள்ளது.

    இலங்கையில் இருந்து தமிழ் நாட்டுக்கு வரும் விஜய்சேதுபதி என்ன மாதிரியான பிரச்சனைகளை சந்திக்கிறார் என்பதே கதையின் கருவாக உள்ளது.

    இயக்குநர் மோகன் ராஜா இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

    விஜய்சேதுபதி படம்

    விஜய்சேதுபதி படம்

    விஜய்சேதுபதி நடிப்பில் அரை டஜன் படங்கள் ரிலீஸை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றன. காதலர் தினத்தை முன்னிட்டு வெளியான குட்டி ஸ்டோரியில் ஆடலும் பாடலும் கதையில் அசால்ட்டாக வந்து தனது அசாத்திய நடிப்பை வெளிப்படுத்திய விஜய்சேதுபதி நடிப்பில் சீக்கிரமே யாதும் ஊரே யாவரும் கேளிர் படம் வெளியாகவிருக்கிறது.

    பிசி சேது

    பிசி சேது

    லாபம், கடைசி விவசாயி, மாமனிதன், இடம் பொருள் ஏவல், நெட்பிளிக்ஸின் நவரசா என ஏகப்பட்ட படங்கள் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாக விருக்கின்றன. மேலும், தமிழ், தெலுங்கு, இந்தி என புதிய புதிய படங்களில் கையெழுத்துப் போட்டு நடித்துத் தள்ளிக் கொண்டே இருக்கிறார் மனுஷன்.

    யாதும் ஊரே யாவரும் கேளிர் டீசர்

    யாதும் ஊரே யாவரும் கேளிர் டீசர்

    இந்நிலையில், தற்போது யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தின் டீசரை வெளியிட்டுள்ளார் விஜய்சேதுபதி. இயக்குநர் வெங்கட கிருஷ்ணா ரோகந்த் இயக்கத்தில் இந்த படம் உருவாகி உள்ளது. விஜய்சேதுபதிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். இயக்குநர் மோகன் ராஜா, விவேக், ரித்விகா, கனிகா என ஏகப்பட்ட பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

    தமிழில் கதைச்சேன்

    தமிழில் கதைச்சேன்

    இலங்கை தமிழனாக இந்த படத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ளார். இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் விஜய்சேதுபதிக்கு எதிர்பாராத விதமாக காத்திருக்கும் பிரச்சனைகளை வைத்து படத்தை இயக்குநர் உருவாக்கி உள்ளார். தமிழ்நாட்டிற்கு வந்து தமிழில் கதைச்சேன்.. உள்ளே தூக்கி வச்சிட்டாங்க என டீசரில் விஜய்சேதுபதி பேசும் வசனம் வைரலாகி வருகிறது.

    நீ தமிழன் தான்

    அதே போல டீசர் முடிவில் நீ தமிழன் தான் சொன்ன உடனே விக்கல் வருதே என லாக்கப் வெளியே இருக்கும் நபர் ஒருவர் பேசும் கடைசி பன்ச் மற்றும் என் கிட்ட ஆதார் கார்டு இல்லை என விஜய்சேதுபதி பேசும் வசனம் நீ ஏன் இங்கே வந்த என எல்லாரும் கேட்க படம் எப்படி இருக்கும் எதை பற்றி இருக்கும் என்பதை காண ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

    சம்மர் ரிலீஸ்

    சம்மர் ரிலீஸ்

    வரும் ஏப்ரலில் ஏற்கனவே ஏகப்பட்ட போட்டிகள் உள்ள நிலையில் யாதும் ஊரே யாவரும் கேளிர் திரைப்படமும் சம்மர் ரிலீஸ் என படக்குழு அறிவித்துள்ளது. ஆனால், இன்னமும் ரிலீஸ் தேதியை உறுதி செய்யவில்லை. ஏப்ரல் இறுதியில் இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    Vijay Sethupathi’s Yaadhum Oore Yaavarum Kelir teaser out now. Vijay Sethupathi doing a Srilankan Tamilan role in this flick.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X