பரபர வேகத்தில் விஜய்சேதுபதி... மாஸ்டர் முடிந்ததும் யாதும் ஊரே... கடைசி ஷெட்யூல் இங்க நடக்குதாமே!
சென்னை: விஜய் சேதுபதி நடிக்கும் யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தின் இறுதிக்கப்பட்ட படப்பிடிப்பு தொடங்கி உள்ளது.
Recommended Video
விஜய்யின், மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்துள்ளார் விஜய் சேதுபதி. அந்தப் படத்தின் ஷூட்டிங் நேற்று முன்தினம் முடிவடைந்தது.
அப்போது விஜய்-க்கு விஜய் சேதுபதி கொடுத்த முத்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாயின.

யாதும் ஊரே யாவரும் கேளிர்
இந்நிலையில், அவர் ஹீரோவாக நடித்து வரும் படம், 'யாதும் ஊரே யாவரும் கேளிர்'. அறிமுக இயக்குனர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இந்தப் படத்தை இயக்குகிறார். இவர், இயக்குநர் ஜனநாதனிடம் பேராண்மை, புறம்போக்கு படங்களில் பணிபுரிந்தவர். படத்தை சந்திரா ஆர்ட்ஸ் சார்பாக இசக்கி துரை தயாரிக்கிறார். நிவாஸ் கே. பிரசன்னா இசை அமைக்கிறார்.

மகிழ் திருமேனி
சினி இன்னோவேஷன்ஸ் சார்பில் ஆர்.கே.அஜெய்குமார் இணை தயாரிப்பு செய்கிறார்.
விஜய் சேதுபதி ஜோடியாக மேகா ஆகாஷூம் வில்லனாக இயக்குனர் மகிழ் திருமேனியும் நடிக்கின்றனர். மற்றும் விவேக், இயக்குனர் மோகன் ராஜா, கனிகா உட்பட பலர் நடிக்கின்றனர்.

சர்வதேச பிரச்னை
இந்தப் படத்தின் ஷூட்டிங் கொடைக்கானலில் தொடங்கி, கும்பகோணம், சென்னை உட்பட பல பகுதிகளில் நடந்தது. காதல், இசை என கொண்டாட்டங்களை உள்ளடக்கிய கதை. சர்வதேச அளவில் நடக்கும் பிரச்னையை பேசும் படம். கமர்சியல் படம்தான். இருந்தாலும் சிறந்த விஷயம் ஒன்றை இதில் சொல்கிறோம் என்று இயக்குனர் ரோகாந்த் தெரிவித்திருந்தார்.

கடைசிக் கட்டப் படப்பிடிப்பு
இந்நிலையில் இதன் கடைசிக் கட்ட படப்பிடிப்பு கொடைக்கானலில் நேற்று தொடங்கியுள்ளது. அங்கு விஜய் சேதுபதி, மகிழ் திருமேனி உட்பட பலர் நடிக்கும் காட்சிகள் படமாகி வருகின்றன. இன்னும் சில நாட்கள் அங்கு படப்பிடிப்பு நடக்கும் என்று தெரிகிறது. அதோடு ஷூட்டிங் முடிவடைகிறது என்று படக்குழு தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











