சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் விஜய்சேதுபதி .. மாஸ் புகைப்படம்.. ரசிகர்கள் வியப்பு!
சென்னை : விஜய் சேதுபதி படத்திற்கு படம் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுப்பது மட்டுமல்லாமல் தன்னைத்தானே அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு மாற்றிக் கொண்டும் வருகிறார்.
அவ்வாறு விஜய்சேதுபதி திரைப்படத்திற்காக போடும் கெட்டப்புகள் பிரபலமாகி வந்த நிலையில் தற்போது லாக்டவுனில் நரைத்த தாடியும் கையுமாக இதுவரை பலரும் பார்க்காத விஜய்சேதுபதியின் புதிய தோற்றத்தில் வலம் வந்து கொண்டிருந்தார்.
இந்த நிலையில் விஜய்சேதுபதி சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் தாடியுடன் செம கெத்தாக போன் பேசிக் கொண்டே இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.

எப்படிடா இந்த மனுஷன்
தென்னிந்திய நடிகர்களில் தனது தனித்துவமான நடிப்பின் மூலம் பலரையும் கவர்ந்து வரும் விஜய்சேதுபதி, இந்திய அளவில் மிகப் பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தேர்ந்தெடுக்கும் கதைகளும் கதாபாத்திரங்களும் இன்று வரை பலராலும் பேசப்பட்டு "எப்படிடா இந்த மனுஷன் இப்பிடி யதார்த்தமா நடிக்கிறார்" என சொல்லும் வகையில் அனைவரையும் வியக்க வைத்து வருகிறார்.

ஹிந்தி மொழியிலும் ரீமேக்
அந்த வகையில் சமீபத்தில் இவரின் நடிப்பில் வெளியான விக்ரம் வேதா திரைப்படம் தமிழ் ரசிகர்களை மட்டுமல்லாமல் இந்திய அளவில் பல்வேறு ரசிகர்களையும் கவர்ந்து அந்த திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி தற்பொழுது ஹிந்தி மொழியிலும் ரீமேக் செய்ய பட உள்ளது.

மாஸ்டர் திரைப்படம்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் பேட்ட திரைப்படத்தில் மிரட்டும் வில்லனாக வந்து அனைவரையும் மிரள வைத்த விஜய் சேதுபதி தற்பொழுது தென்னிந்தியாவில் அதிகமாக விரும்பப்படும் உச்ச நடிகர்களில் ஒருவராக உள்ள தளபதி விஜய்யின் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டு வருகிறார்.

சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில்
மாஸ்டர் திரைப்படத்தில் தான் நடிக்கும் வில்லன் பாத்திரத்தில் "துளிகூட நல்லவன் கிடையாது" என சமீபத்தில் கூறி அனைவரின் எதிர்பார்ப்புகளையும் எகிற வைத்த விஜய்சேதுபதி தற்போது நரைத்த தாடியுடன் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் உலா வந்து கொண்டிருக்கிறார்.

லாபம் திரைப்படத்தின்
ஓரிரு நாட்களுக்கு முன்பு எஸ் பி ஜனநாதன் இயக்கத்தில் நடித்து வரும் லாபம் திரைப்படத்தின் டப்பிங் வேலைகளை தொடங்கிய விஜய் சேதுபதி, யாதும் ஊரே யாவரும் கேளிர், கடைசி விவசாயி, காத்துவாக்குல இரண்டு காதல் என பல தமிழ் படங்களில் பிஸியாக நடித்து வருவதோடு, ஒரு சில தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

செம்ம ஸ்மார்ட்டான
இந்நிலையில் லாக்டவுனில் நரைத்த தாடியுடன் சில நாட்களுக்கு முன்பு எடுத்த வெறித்தனமான போட்டோஷூட் செம்ம வைரலான நிலையில், தற்பொழுது செம்ம ஸ்மார்ட்டான கருப்பு நிற டீசர்ட் அணிந்து கொண்டு சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் போன் பேசியவாறு இருக்கும் விஜய்சேதுபதியின் புகைப்படம் ஒன்று தற்பொழுது பலராலும் ரசிக்கப்பட்டு வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











