Vijay Sethupathi - யப்பா ஆளை விடுங்க.. தலைவர் 171 படத்துக்கு நோ சொன்னாரா விஜய் சேதுபதி?

சென்னை: Vijay Sethupathi (விஜய் சேதுபதி) லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்த்தை வைத்து இயக்கும் படத்துக்கு விஜய் சேதுபதி நோ சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் தலை காட்டி ஹீரோவாக வளர்ந்தவர் விஜய் சேதுபதி. அவர் முதன்முதலில் நடித்த தென்மேற்கு பருவக்காற்று படத்தில் தன்னுடைய நடிப்பால் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். மேலும் தமிழ் சினிமாவில் பெரும் ரவுண்டு வருவார் என்றும் பலரால் கணிக்கப்பட்டார்.

Vijay Sethupathi Says No To Thalaivar 171 Movie

தொடர் ஹிட்டுகள்: அதற்கேற்றபடிதான் விஜய் சேதுபதியின் கிராஃப்பும் இருந்தது. அவர் நடித்த பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும், சூதுகவ்வும் ஆகிய படங்கள் வரிசையாக மெகா ஹிட்டாகின. இதனால் அத்தனை வருட உழைப்புக்கும் சேர்த்து வெற்றிகளை சுவைத்தார் சேது. முக்கியமாக ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய நடிப்பு, டயலாக் டெலிவரி என அனைத்தையும் மாற்றி தான் ஒரு மிகச்சிறந்த நடிகன் என்பதை ஆணித்தரமாக நிரூபித்தார்.

கதைதான் முக்கியம்: இடையில் சில சறுக்கல்களை சந்தித்த விஜய் சேதுபதி கதை என்ன கேட்டாலும் அதற்காக எது வேண்டுமானாலும் செய்வேன் என்ற நிலைக்கு நகர்ந்தார். பொதுவாக ஒருவர் ஹீரோவாக ஹிட் கொடுத்துவிட்டால் அந்த இடத்திலிருந்து நகர மறுப்பார்கள். ஆனால் விஜய் சேதுபதியோ அப்படி இல்லை. ஹீரோவாக பீக்கில் இருந்தபோதே பேட்ட, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களில் வில்லனாகவும் கலக்கினார்.

ஹிந்தியில் என்ட்ரி: அதேபோல் தமிழில் கலக்கிக்கொண்டிருந்த விஜய் சேதுபதி ஹிந்தியிலும் நுழைந்திருக்கிறார். அவரது நடிப்பில் வெளியான ஃபர்ஸி வெப் சீரிஸ் பெரும் வெற்றி பெற்றது. அதேபோல் மாநகரம் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடித்த அவர் கடைசியாக ஹிந்தியில் ஜவான் படத்தில் வில்லனாக நடித்தார். அதேபோல் கத்ரீனா கைஃபுடன் நடித்திருக்கும் மெர்ரி கிறிஸ்துமஸ் படம் டிசம்பர் மாதம் ரிலீஸாகவிருக்கிறது.

தலைவர் 171க்கு நோ: விஜய் சேதுபதி எவ்வளவுதான் வில்லனாக நடித்து அது ரசிக்கப்பட்டாலும் அவரது ரசிகர்களை பொறுத்தவரை அவர் மீண்டும் முழு நேர ஹீரோவாக நடிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. அதனை பூர்த்தி செய்யும் வகையில் ஆறுமுக குமார் இயக்கத்தில் ஒரு படத்திலும், நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் மகாராஜா (விஜய் சேதுபதிக்கு 50ஆவது படம்), மிஷ்கின் இயக்கத்தில் ஒரு படம் என ஹீரோவாக மீண்டும் பிஸியாகியிருக்கிறார்.

இந்நிலையில் ரஜினிகாந்த்தை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் தலைவர் 171 படத்தில் வில்லனாக நடிப்பதற்கு விஜய் சேதுபதியிடம் லோகேஷ் கனகராஜ் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அதற்கு விஜய் சேதுபதி நோ சொல்லிவிட்டார் என்றும் புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதற்கு காரணம் என்னவென்றால் ஹீரோவாக கமிட்டாகியிருக்கும் படங்களை முடிக்கவே இன்னும் சில காலம் ஆகலாம் என்பதுதான் என்கிறார்கள் திரைத்துறையினர். ரஜினிகாந்த்துக்கு ஆப்போசிட் ரோலாக ஏற்கவே பேட்ட படத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X