கதையை கூட கேட்காமல் ரஜினி படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட விஜய் சேதுபதி: காரணம்...
Recommended Video

சென்னை: ரஜினிகாந்த் படத்தின் கதையை கூட கேட்காமல் நடிக்க ஒப்புக் கொண்டாராம் விஜய் சேதுபதி.
கோலிவுட்டின் பிசியான நடிகர் விஜய் சேதுபதி தான். கடந்த சில ஆண்டுகளாகவே கை நிறைய படங்கள் வைத்து ஓடியோடி நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் அவர் ரஜினிகாந்த் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளது அனைவரும் அறிந்ததே.

விஜய் சேதுபதி
வழக்கமாக கதையே கேட்டு அது பிடித்திருந்தால் மட்டுமே நடிக்க ஒப்புக் கொள்வார் விஜய் சேதுபதி. ஆனால் கதையை கேட்காமலேயே ரஜினியின் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளாராம்.

கார்த்திக் சுப்புராஜ்
ரஜினி படத்தை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ் மீது வைத்துள்ள நம்பிக்கையால் கதையை கேட்காமலேயே நடிக்க ஒப்புக் கொண்டாராம் விஜய் சேதுபதி. பீட்சா, இறைவி ஆகிய படங்களில் விஜய் சேதுபதியும், கார்த்திக் சுப்புராஜும் சேர்ந்து பணியாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் ஸ்டார்
ரஜினியுடன் சேர்ந்து நடிக்கும் ஆசையிலும் கதையை கேட்கவில்லையாம் விஜய் சேதுபதி. ரஜினி நடிப்பதை அருகில் இருந்து பார்த்து ரசிக்கும் வாய்ப்பை தவறவிட விரும்பவில்லை என்று விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

கதாபாத்திரம்
கார்த்திக் சுப்புராஜ் படத்தில் ரஜினி வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. விஜய் சேதுபதி தற்போது மணிரத்னத்தின் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











