கமலை விட விஜய் சேதுபதி இந்த விஷயத்தில் சூப்பர்.. பிக் பாஸ் தமிழ் 8 போட்டியாளர்கள் திருந்துவார்களா?

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த 7 சீசன்களாக பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி மாஸ் காட்டினார். சிம்பு கூட கமல் அளவுக்கு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவில்லை என விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன.

ஆனால், விஜய் சேதுபதி இந்த சீசனை தொகுத்து வழங்கி வரும் விதம் ரசிகர்களுக்கு பிடித்துள்ள நிலையில், கமல்ஹாசன் உடன் கம்பேர் செய்வதை அவர்கள் நிறுத்துவதாக தெரியவில்லை.

bigg boss tamil 8 vijay sethupathi kamal haasan

சனிக்கிழமை எபிசோடில் விஜய் சேதுபதி அருண் பிரசாத்தை பார்த்து சொன்ன அந்த விஷயம் சூப்பர் என்றும் கமலை விட இந்த விஷயத்தில் விஜய் சேதுபதி ஸ்கோர் செய்கிறார் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.

டபுள் மீனிங் அரசியல்: தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான கமல்ஹாசன் பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் போது அவர் அளவுக்கு வார்த்தை ஜாலத்தில் யாருமே பேச முடியாது என்பதை ரசிகர்கள் நன்றாகவே உணர்ந்தனர். டபுள் மீனிங்கில் அரசியலும் கலந்து அவர் நிகழ்ச்சியை நடத்தி வந்தார். கமல்ஹாசனை தாண்டிய பிரபலங்கள் யாரும் பிக் பாஸ் வீட்டுக்குள் வர முடியாத நிலையில், அனைவரும் அவருக்கு அடுத்து என்கிற நிலைமை தான் இருந்தது.

ஆரம்பத்தில் அதிரடி: கமல்ஹாசன் ஆரம்ப சீசன்களில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் காட்டிய அதிரடி எல்லாம் அதன் பின்னர் 5வது சீசனுக்கு மேல் அப்படியே குறையத் தொடங்கி விட்டதாகவே ரசிகர்கள் ஃபீல் செய்தனர். கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் முறையையே கோபி, சுதாகர் பரிதாபங்கள் நிகழ்ச்சியில் ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர். கடந்த சீசனில் பிரதீப் ஆண்டனிக்கு எதிராக அவர் ரெட் கார்டு கொடுக்கப்பட்ட நிலையில், மாயாவுடன் கோர்த்துவிட்டு ஏகப்பட்ட மோசமான விமர்சனங்களும் அவர் மீது விழுந்தன.

நீ திருந்தவே மாட்ட: சனிக்கிழமை எபிசோடில் விஜய் சேதுபதி பாரதி கண்ணம்மா புகழ் அருண் பிரசாத்திடம் பேசும் போது ஒரு பாயிண்ட்டை சொல்ல நினைத்தால் நேரடியாக சொல்லுங்கள் என்றும் பூசி மெழுக வேண்டாம். தலையை சுற்றி மூக்கை தொடுவது போல ஏன் பேசுறீங்க, இதுதான் பாயிண்ட் என நறுக்குன்னு நச்சுன்னு பேசுங்க என சொல்ல அதை ஏற்றுக் கொள்கிறேன் என சொல்லிவிட்டு மீண்டும் இந்த வீட்டில் மற்றவர்களுடன் மீதி நாட்களை கடக்க வேண்டும். அதனால், தான் என சுற்ற ஆரம்பிக்க நீ எல்லாம் திருந்தவே மாட்ட என கலாய்த்து விட்டார் விஜய் சேதுபதி.

சூப்பரப்பு: போன சீசன் வரைக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஹோஸ்ட் தான் சுத்தி வளைச்சு பேசுவார். ஆனால், இந்த சீசனில் சீரியல் கோஷ்டி எல்லாம் ஒரு சம்மந்தி சாப்பாட்டையும் ஒரு முட்டையையும் வைத்துக் கொண்டு ஒரு வாரம் ஓட்டுவது போல பேச, விஜய் சேதுபதியே டென்ஷன் ஆகிட்டாரு, இனியாவது போட்டியாளர்கள் சீரியல் நடிகர்கள் போல இழுத்து அடிக்காமல் கேள்விக்கான சரியான பதிலை நச்சுன்னு கொடுக்கிறாங்களா பார்ப்போம் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால், அதெல்லாம் நடக்கும்னு நினைக்கிறீங்க, விஜய் சேதுபதி போற போக்கில் ஆளவிடுங்கடா சாமின்னு ஓடாம இருந்தா சரி!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X