‘விமானத்தில் புளியோதரை விற்கலாம்’... புதிய பிசினஸ் ஐடியா தரும் கஞ்ச டான்!

ஜுங்கா படத்தில் விஜய் சேதுபதி விமானத்தில் புளிசாதம் விற்கும் காட்சி வித்தியாசமாக உள்ளது.

Recommended Video

வெள்ளைக்காரர்களை புளியோதரை சாப்பிட வைத்த விஜய் சேதுபதி..வீடியோ

சென்னை: ஜுங்கா படத்தில் கஞ்சன் டானாக நடித்துள்ள விஜய் சேதுபதி, ஃபிளைட்டில் புளிசாதம் விற்கும் காட்சி சிரிப்பை வரவழைக்கின்றது.

இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்திற்கு வெற்றிக்கு பிறகு, விஜய் சேதுபதி, இயக்குனர் கோகுல் இணைந்துள்ள படம் ஜுங்கா. இந்த படத்தை, நடிகர் அருண்பாண்டியனுடன் இணைந்து விஜய் சேதுபதி தயாரித்துள்ளார்.

சாயிஷா, மடோனா செபாஸ்டின், யோகிபாபு, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார்.

டிரெய்லர் வெளியீடு

டிரெய்லர் வெளியீடு

ஜுங்கா படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. விஜய் சேதுபதி, சாயிஷா, சரண்யா, இயக்குனர் கோகுல், ஒளிப்பதிவாளர் டட்லி உள்ளிட்ட படக்குழுவினர் விழாவில் பங்கேற்றனர். தயாரிப்பாளர் ஆர்.பி.சௌதிரி இசையை வெளியிட்டார்.

கஞ்சன் டான்

கஞ்சன் டான்

'பாரீஸ் டு பாரீஸ்' என்பது தான் படத்தின் ஒன்லைன். கதைப்படி, நாயகன் விஜய் சேதுபதி கஞ்சத்தனம் மிக்க ஒரு டான். அவரது உதவியாளர் யோகிபாபு. இருவரும், பழிவாங்கும் படலத்துக்காக பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிசுக்கு விமானத்தில் செல்கின்றனர்.

பிளைட்டில் வியாபாரம்

பிளைட்டில் வியாபாரம்

அப்போது, அவர்கள் சாப்பிடுவதற்காக விஜய் சேதுபதியின் தாய் சரண்யா, ஒரு தூக்கு சட்டியில் புளிசாதம் கொடுத்து அனுப்புகிறார். விமானத்தில் பயணிக்கும் இருவரும் புளிசாதத்தை எடுத்து சாப்பிடுகின்றனர். இதைப் பார்த்து, அவர்களது பக்கத்து இருக்கையில் அமர்ந்திருக்கும் வெளிநாட்டுக்காரர் ஒருவர் புளிசாதத்தை விரும்பிக் கேட்க, அவரிடம் பணத்தை பெற்றுக்கொண்டு ஒரு ஸ்பூன் புளிசாதத்தை விற்கிறார் விஜய் சேதுபதி.

புது பிசினஸ்

புது பிசினஸ்

புளிசாதத்தின் ருசி அனைவரையும் தொற்றிக்கொள்ள, விமானத்தில் வரும் அனைவரும் விஜய் சேதுபதியிடம் பணம் கொடுத்து புளிசாதத்தை வாங்கி சாப்பிடுகின்றனர். ஆக, கஞ்சனான டான் ஜுங்கா, விமானத்தில் செய்யும் இந்த பிசினஸ், ரசிகர்களை அடடே சொல்ல வைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X