பிரபு தேவாவின் கலக்கல் கெட்டப்பில் மை டியர் பூதம்... மோஷன் போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி!
சென்னை : பிரபுதேவா நடிப்பில் தேள், எங் மங் சங், பஹீரா ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளன.
அவர் பாலிவுட்டிலும் ஜர்னி என்ற படத்தில் கமிட் ஆகியுள்ளார்.
இந்நிலையில் மை டியர் பூதம் என்ற படத்தில் அவர் தற்போது ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

நடிகர் பிரபுதேவா
நடிகர் பிரபுதேவா நடிப்பில் தேள், எங் மங் சங் மற்றும் பஹீரா படங்கள் ரிலீசுக்கு தயாராகி உள்ளன. இதில் தேள் படம் இன்றைய தினம் ரிலீஸ் ஆக உள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டு தற்போது ரிலீஸ் தேதி தள்ளி போய் உள்ளது.

பாலிவுட்டிலும் நடிக்கிறார் பிரபுதேவா
இந்நிலையில் பாலிவுட்டில் ஷிஷ் குமார் துபே இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் பிரபுதேவா கமிட் ஆகியுள்ளார். இந்த படத்திற்கு ஜர்னி என்று பெயரிடப்பட்டுள்ளது. பாலிவுட்டில் படங்கள் இயக்கி வந்த பிரபுதேவா, தற்போது படங்களில் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

மை டியர் பூதம் படம்
இந்நிலையில் தற்போது ராஜவன் இயக்கத்தில் மை டியர் பூதம் என்ற புதிய படத்தில் நடிகர் பிரபுதேவா ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் மாஸ்டர் அஸ்வந்த் குமார், ரம்யா நம்பீசன், பிக்பாஸ் புகழ் சம்யுக்தா உள்ளிட்டவர்கள் நடிக்க உள்ளனர்.

டி இமான் இசை
படத்திற்கு டி இமான் இசை அமைக்க உள்ளார். அபிஷேக் பிலிம்ஸ் சார்பில் படத்தை ரமேஷ் பிள்ளை தயாரிக்கிறார்.

ஃபேண்டசி படம்
பேண்டஸி படமாக உருவாக உள்ள இந்த படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் பர்ஸ்ட் லுக்கை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர்களை நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இசையமைப்பாளர் இமானும் பகிர்ந்துள்ளார்.

பூதம் கெட்டப்பில் பிரபுதேவா
படத்தில் பூதம் கெட்டப்பில் பிரபுதேவா காணப்படுகிறார். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பொன் மாணிக்கவேல் படம்
நடிகர் பிரபுதேவா நடிப்பில் இறுதியாக வெளியான பொன் மாணிக்கவேல் படம் கலவையான விமர்சனங்களை பெற்று உள்ளது. இந்நிலையில் அடுத்தடுத்த படங்கள் அவரது நடிப்பில் ரிலீசாக உள்ளன. மேலும் தற்போது பூதம் கெட்டப்பில் அவர் நடிக்க உள்ளது மிகவும் சிறப்பாக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











