twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என் மனசாட்சிக்கு மிகவும் நெருக்கமான படம் லாபம்... விஜய்சேதுபதி உருக்கம்

    |

    சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் சமீபத்தில் லாபம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வித்யாசமான கருத்துக்களை பெற்று வருகிறது .

    இயக்குனர் எஸ் பி ஜனநாதன் இயக்கத்தில் இரண்டாவது முறையாக விஜய் சேதுபதி இணைந்துள்ள இந்த திரைப்படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியானது.

    அந்த மனசுதான் சார்... ஏழை குடும்பத்துக்கு ஜேசிபி வாங்கி கொடுத்த பிரபல நடிகர்.. குவியும் வாழ்த்து! அந்த மனசுதான் சார்... ஏழை குடும்பத்துக்கு ஜேசிபி வாங்கி கொடுத்த பிரபல நடிகர்.. குவியும் வாழ்த்து!

    நீண்ட இடைவெளிக்கு பிறகு படங்கள் திரையரங்குகளில் வெளியாவதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருக்க இப்பொழுது லாபம் திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் அசுரத்தனமான நடிப்பை ரசிகர்கள் ஒரு பக்கம் கொண்டாடி வருகின்றனர்.இன்னொரு பக்கம் என்ன ஆச்சு விஜய் சேதுபதிக்கு என்று கேள்வியும் எழுப்பி வருகின்றனர் .

    பவானி கதாபாத்திரம்

    பவானி கதாபாத்திரம்

    விஜய் சேதுபதியின் திரைப்படங்கள் என்றாலே ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். அவர் தேர்ந்தெடுக்கும் கதைகள் அவ்வாறு ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாதது போல இருக்கும். முதல் முறையாக விஜய்யுடன் இணைந்து, விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக அமைந்தது. மேலும் அந்த படத்தில் விஜய்சேதுபதியின் பவானி கதாபாத்திரம் ஹீரோவின் கதாபாத்திரத்திற்கு சரி சமமாக அமைந்தது படத்தின் வெற்றிக்கு மிகப் பெரிய பலமாக அமைந்தது . விஜய் சேதுபதியும் தனது இயல்பான நடிப்பின் மூலம் அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து இருப்பார்.

    முதலில் ஓடிடியில்

    முதலில் ஓடிடியில்

    மாஸ்டர் படத்திற்குப் பிறகு கொரோனா சூழல் காரணமாக படங்கள் வெளியாகாமல் தேக்கி வைக்கப்பட்டு இருந்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டதால் திரைப்படங்கள் ஒன்றாக வெளியாகி வருகிறது. அந்த வகையில் பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வந்த லாபம் திரைப்படமும் முதலில் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. பின் ஓடிடியில் வெளியாகாமல் நேரடியாக திரையரங்கில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியாகியது.

    கருத்துக்களை துணிச்சலாக

    கருத்துக்களை துணிச்சலாக

    ஒவ்வொரு படத்திலும் கமர்ஷியல் எலமெண்ட்டுகள் எதுவும் இல்லாமல் சமூகத்திற்கு முக்கியமான கருத்துக்களை துணிச்சலாகவும், பொருளாதார அரசியல் பற்றி எளிய மக்களுக்கும் புரிகின்ற வகையில் எளிய முறையில் படங்களில் காட்டி வந்த எஸ்பி ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து உள்ளார்.விஜய் சேதுபதி மற்றும் எஸ்பி ஜனநாதன் கூட்டணி ஏற்கனவே புறம்போக்கு என்கிற பொதுவுடமை என்ற படத்தில் இணைந்தது - இப்பொழுது லாபம் படத்தின் மூலம் இரண்டாவது முறையாக இணைகின்றனர்.

    Recommended Video

    Laabam Movie Review | Poster Pakiri Review | Filmibeat Tamil
     வெகுவாக கவர்ந்தது

    வெகுவாக கவர்ந்தது

    மிகச் சிறந்த இயக்குனர், மிகச் சிறந்த நடிகர் என இருவரும் இணைந்தும் கூடுதலாக தென்னிந்தியாவில் தனித்துவமான நடிகையாக வலம்வரும் ஸ்ருதி ஹாசன் இதில் ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் கலையரசன் மற்றும் தன்ஷிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்பில் திரையரங்குகளில் வெளியான லாபம் திரைப்படம் வெளியான நாள் முதலே பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் இரண்டும் கலந்த விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக இந்த படத்தில் கார்ப்பரேட் கம்பெனிகள் விவசாயிகளின் உழைப்பை எவ்வாறு சுரண்டுகிறது. உண்மையான லாபம் என்றால் அது விவசாயம் தான் என பல முக்கிய கருத்துக்களை இப்படம் கூறியுள்ளது .. இதுவரை விஜய் சேதுபதி பல கதாபாத்திரங்களில் நடித்து இருந்தாலும் லாபம் திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் அசுரத்தனமான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

    எல்லா நண்பர்களிடமும்

    எல்லா நண்பர்களிடமும்

    விஜய் சேதுபதி வீட்டிற்கு யார் சென்றாலும் முதலில் பார்ப்பது எஸ் பி ஜனநாதன் அவர்களுடைய போட்டோ பிரேம் தான் . அப்பா அம்மா பாசத்திற்கு இணையாக விஜய் சேதுபதி மதிக்க தக்க ஒரு மனிதராக எஸ் பி ஜனநாதன் வாழ்ந்து உள்ளார் என்பது தான் நிதர்சனமான உண்மை . மனசாட்சிக்கு மிகவும் நெருக்கமான படம் "லாபம்" என்று தான் சந்திக்கும் எல்லா நண்பர்களிடமும் "லாபம்" படம் பற்றியும், எஸ் பி ஜனநாதன் தனக்கு சொல்லி தந்த விஷயங்கள் பற்றியும் பெருமையாக பேசி வருகிறார் .

    English summary
    Whoever goes to Vijay Sethupathi's house first sees SB Jannathan's photo frame. The fact of the matter is that SB Jananathan lives as a man worthy of respect by Vijay Sethupathi on par with father and mother affection. SB Jannathan has been talking proudly about the film "Laabam" to all the friends he meets and the things that SB Jananathan has told him that the film that is closest to his conscience is "Laabam".
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X