தாறுமாறான சிரிப்பு... மக்கள் செல்வன் பகிர்ந்த புகைப்படம்... சிரிப்புக்கு காரணம் என்னவா இருக்கும்?
சென்னை : நடிகர் விஜய் சேதுபதி ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகராக உள்ளார். இயல்பான நடிப்பால் அனைவரையும் கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில் சன் டிவியில் பிரமாண்டமாக உருவாகிவரும் சமையல் ஷோவை இவர் தொகுத்து வழங்க உள்ளார்.
இதனிடையே சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

வித்தியாசமான கேரக்டர்கள்
நடிகர் விஜய் சேதுபதி தன்னுடைய இயல்பான வித்தியாசமான நடிப்பு மற்றும் சிறப்பான கேரக்டர்கள் தேர்வால் குறைந்த காலகட்டத்தில் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார். கேரக்டர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வயதான கேரக்டர் ஆனாலும் இளம்வயது கேரக்டரானாலும் தன்னுடைய நடிப்பால் அந்த கேரக்டருக்கு மெருகேற்றிவிடுவார்.

தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதி
தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்துவரும் விஜய் சேதுபதி, தற்போது சன்டிவியில் ஒளிபரப்பாக உள்ள சமையல் ஷோவையும் தொகுத்து வழங்கவுள்ளார். தெலுங்கில் இந்த ஷோவை நடிகை தமன்னா தொகுத்து வழங்கவுள்ள நிலையில், இருவரும் இணைந்து சூட்டிங் ஸ்பாட்டில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமீபத்தில் வெளியிட்டிருந்தார்.

குவிந்த லைக்ஸ்கள்
இந்நிலையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை விஜய் சேதுபதி பகிர்ந்துள்ளார். அதில் எதற்காகவோ மனம்விட்டு சிரிக்கிறார். அவரை சிரிக்க வைத்த நிகழ்வு அல்லது நபர் யாரென்பதை அவர் அந்த புகைப்படத்தில் குறிப்பிடவில்லை. ஆயினும் லைக்ஸ்கள் அள்ளுகின்றன.

நடனக் கலைஞர்கள்
சமையல் ஷோவின் படப்பிடிப்பின் இடையில் அந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான காஸ்ட்யூமை அவர் அணிந்துள்ளார். பிரமோவிற்கான சூட்டிங்காக அது இருந்திருக்க வேண்டும். கூடவே சக கலைஞர்கள் மற்றும் நடனக் கலைஞர்களும் அந்த புகைப்படத்தில் காணப்படுகின்றனர்.


Click it and Unblock the Notifications











