ஸ்ருதி ஹாஸன் திரும்பி வந்தாச்சு: 'புரட்சி விவசாயி' விஜய் சேதுபதியுடன் நடிக்கிறார்
Recommended Video
சென்னை: விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாஸன் முதன்முறையாக சேர்ந்து நடிக்கும் படத்தின் வேலை பூஜையுடன் துவங்கியுள்ளது.
ஸ்ருதி ஹாஸன் புதுப்படங்கள் எதிலும் ஒப்பந்தம் ஆகாமல் இருந்து வந்தார். அடிக்கடி லண்டன், அமெரிக்காவுக்கு சென்று காதலர் மைக்கேல் கார்சேலை சந்தித்து வருகிறார்.
திருமணம் செய்து கொள்ளப் போவதால்தான் ஸ்ருதி படங்களில் நடிக்கவில்லை என்று கூறப்பட்டது. இந்நிலையில் புதுப்படம் ஒன்றில் நடிக்கிறார் அவர்.

ஸ்ருதி
எஸ்.பி. ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் ஸ்ருதி. லாபம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த படத்தின் வேலை பூஜையுடன் துவங்கியுள்ளது.

பாடகி
லாபம் படத்தில் சமூக பிரச்சனைகளுக்காக போராடும் புரட்சிகரமான விவசாயியாக நடிக்கிறாராம் விஜய் சேதுபதி. ஸ்ருதி ஹாஸன் பாடகி மற்றும் டான்ஸராக நடிக்கிறாராம். நிஜத்திலும் அவர் ஒரு பாடகி என்பதால் அந்த கதாபாத்திரம் அவருக்கு நெருக்கமானதாக இருக்கும்.

ஜெகபதி பாபு
லாபம் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு அம்பாசமுத்திரத்தில் நடக்கிறது. ஜெகபதி பாபு வில்லனாக நடிக்கிறார். படத்திற்கு இமான் இசையமைக்கிறார். விஜய் சேதுபதியை இப்படி ஒரு கதாபாத்திரத்தில் பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

காதல்
தற்போதைக்கு திருமணம் செய்யும் எண்ணம் இல்லை. அது நடக்கும் போது நடக்கும். நல்ல கதை கிடைத்தால் நிச்சயம் நடிப்பேன் என்றார் ஸ்ருதி ஹாஸன். இந்நிலையில் லாபம் படத்தில் நடிக்கிறார் அவர்.


Click it and Unblock the Notifications











