இப்போ மட்டும் அப்பா ஏன் வந்தாரு.. திடீர் கேள்விக்கு விஜய் சேதுபதி மகன் எப்படி சமாளித்தார் தெரியுமா?
சென்னை: ஸ்டன்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கத்தில் விஜய் சேதுபதி மகன் சூர்யா சேதுபதி நடிக்கும் 'பீனிக்ஸ்' படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. அந்த விழாவில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தனது குடும்பத்துடன் கலந்து கொண்டார். அப்பா பெயரை பயன்படுத்தாமல் சூர்யா என்கிற பெயருடன் முதல் படத்தில் நடிக்கப் போகிறேன் என சொன்னீங்களே இப்போ மட்டும் புரமோஷனுக்கு அப்பா ஏன் வந்தார் என பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்ப அதற்கு சூர்யா சேதுபதி பதிலளித்துள்ளார்.
விஜய் சேதுபதி நடித்த நானும் ரவுடி தான், சிந்துபாத் உள்ளிட்ட படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்த விஜய் சேதுபதியின் மகன் சூர்யா அதற்குள் ஹீரோவாக அறிமுகமாகி விட்டார். அவருடைய அப்பா சினிமாவுக்கு வர பல ஆண்டுகள் கஷ்டப்பட்ட நிலையில், வாரிசு நடிகராக சூர்யா சினிமாவில் என்ட்ரி கொடுக்க காத்திருக்கிறார்.

அப்பா வேற, நான் வேற என படத்தின் பூஜையில் பேசிய சூர்யா தற்போது வேறு மாதிரி பேசுகிறாரே என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மகாராஜா வெற்றி: ஞாயிற்றுக்கிழமை தியேட்டருக்கு ஒட்டுமொத்த மக்கள் கூட்டமும் குவிந்து படத்தை பார்த்துள்ளது. இந்த ஆண்டு இதுவரை வெளியான படங்களிலேயே ஒரே நாளில் அதிக டிக்கெட்டுகள் விற்ற படமாக மகாராஜா மாறியிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. அந்தளவுக்கு மகாராஜா படத்தை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், அப்பாவின் தயவை நாடியிருக்கிறார் அவரது மகன் சூர்யா சேதுபதி.
சூர்யா என்றால் குழப்பம் வராதா?: நடிகர் சூர்யா ஏற்கனவே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள நிலையில், நீங்கள் சூர்யா என்கிற பெயரில் அறிமுகமானால் குழப்பம் வராதா என்கிற கேள்விக்கு அப்படி வைக்கணும் என முடிவெடுத்து வைத்து விட்டேன். நீங்க எப்படியும் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா என்று தான் எழுதப் போறீங்க அப்படியே இருக்கட்டும் என்றார்.
அப்பாவை அழைத்தது ஏன்?: பீனிக்ஸ் படத்தின் பூஜையின் போது விஜய் சேதுபதி பங்கேற்காத நிலையில், தற்போது டீசர் வெளியீட்டு விழாவுக்கு மட்டும் அப்பாவை அழைத்தது ஏன் என்கிற கேள்விக்கு இன்று தந்தையர் தினம் அதனால் என் அப்பாவை நிகழ்ச்சிக்கு அழைத்து சர்ப்ரைஸ் கொடுத்தேன். என்னோட அம்மா சகோதரி என அனைவரும் வந்துள்ளனர் என பதிலளித்துள்ளார் சூர்யா சேதுபதி.
ஏகப்பட்ட ட்ரோல்: அப்பா பெயரை பயன்படுத்த மாட்டேன் என்றும் அவர் வேறு நான் வேறு என்றும் சூர்யா சேதுபதி பேசியது ஏகப்பட்ட ட்ரோல்களை சந்தித்தது அதையெல்லாம் பார்த்தீர்களா? என்கிற கேள்விக்கு பெரிய பெரிய ஆட்களுக்கே ட்ரோல்கள் குவிகின்றன. நானெல்லாம் எம்மாத்திரம் என பேசியுள்ளார். ஆக்ஷன் காட்சிகளில் நடித்தது பற்றியும் சூர்யா சேதுபதி பேசியுள்ளார். முன்னதாக நிகழ்ச்சியில் பேசும் போது மகன் குறித்து எமோஷனலாகி விஜய் சேதுபதியும் பல்வேறு விஷயங்களை கூறியுள்ளார். சூர்யா என்கிற பெயரில் தான் தொடர்வேன் என்பதை சூர்யா சேதுபதி அறிவித்துள்ளார். சண்டைக் காட்சிகளில் ஸ்டன்ட் மேன்களுக்கு நிஜமாகவே அடியெல்லாம் பட்டதை பார்த்த போது ஒவ்வொரு படத்துக்கும் அவர்கள் கொடுக்கும் உழைப்பு பெரியது என புரிந்துக் கொண்டேன் என்றார்.


Click it and Unblock the Notifications











