Surya Sethupathi: பபுள்கம் மேட்டர்.. மன்னிப்பு கேட்ட சூர்யா சேதுபதி.. VJS எடுத்து சொல்லி இருப்பாரோ?
சென்னை: நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபது. இவரது நடிப்பில் உருவாகி வெளியாகியுள்ள படம் பீனிக்ஸ். இந்த படத்தின் மூலம் தான் சூர்யா சேதுபதி அறிமுகமாகிறார். படம் நேற்றுதான் அதாவது ஜூலை 4ஆம் தேதி தான் ரிலீஸ் ஆனது. ஆனால் அவரது சில பேச்சுகளும் நடவடிக்கைகளும் இணையவாசிகள் மத்தியில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது மட்டுமல்லாமல் ட்ரோல் செய்யப்பட்டது. அதில் மிகவும் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட விஷயம் சூர்யா சேதுபதி வாயில் பபுள்கம் மென்று கொண்டே மேடையில் பேசியது தான். இந்நிலையில் அந்த விஷயம் தொடர்பாக சூர்யா சேதுபதி மன்னிப்பு கேட்டுள்ளார்.
ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கத்தில் உருவான முதல் படமான பீனிக்ஸ் படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார் இந்த படம் பலமுறை ரிலீசுக்கு தயாராகி அதன் பின்னர் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. படத்தின் முதல் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் சூர்யா சேதுபதி பேசுகையில், " நான் வேறு, அப்பா வேறு" எனக் கூறினார். இந்த வார்த்தைகளை சொல்லாமல் இருந்திருந்தால் ஆவது இணையவாசிகள் அமைதியாக இருந்திருப்பார்களோ என்னவோ, சூர்யா சேதுபதி அப்படி பேசிய பின்னர், அவரை நெபுடிசம் என்ற ஹேஷ்டேக்குடன் ஓட்ட ஆரம்பித்தார்கள்.
அதன் பின்னர் ஒரு முறை, தனக்கு தினமும் வெறும் 500 ரூபாய் தான் பாக்கெட் மணியாக கொடுப்பார்கள் எனக் கூறியதற்கு, தயவு தாட்சண்யம் பார்க்காமல் ட்ரோல் செய்யப்பட்டார். இந்நிலையில் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசுகையில் பபுள்கம் மென்று கொண்டே பேசினார். இதுவும் சர்ச்சையாக மாற்றப்பட்டது. இணையவாசிகள் தொடங்கி பல பிரபலங்களுமே இவரை விமர்சித்தனர்.

மன்னிப்பு: இந்நிலையில், இன்று சென்னை வடபழனி கமலா தியேட்டரில் ரசிகர்களுடன் படம் பார்த்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சூர்யா சேதுபது, " அந்த பபுள்கம் மேட்டர் யாரையாவது காயப்படுத்தி இருந்தால் அதற்காக நான் உள்ளபடியே மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" எனக் கூறினார். சூர்யா சேதுபதி மன்னிப்பு கேட்ட பின்னர் பலரும் விஜய் சேதுபதி தனது மகனுக்கு சில அறிவுரைகளை வழங்கி இருப்பார். அதனால்தான் சூர்யா சேதுபதி பபுள்கம் விஷயத்திற்கு மன்னிப்பு கேட்கிறார் என பேசி வருகிறார்கள்.
பாகுபாடு: சூர்யா சேதுபதி பபுள்கம் மென்று கொண்டே பேசினார், அதற்காக மன்னிப்பு கேட்டுள்ளார் என்பது ஒருபுறம் இருக்கட்டும். இந்த விஷயத்தை வேறு ஒரு கோணத்திலும் அணுக வேண்டி உள்ளது என்றால் அது, சூர்யா சேதுபதி மீது பாகுபாடு காட்டப்படுகிறோ என்பதுதான். மேடையில் பபுள்கம் மென்று கொண்டே பேசுவது தவறு என சூர்யா சேதுபதியை விமர்சித்தவர்கள், அதற்கு பல நட்சத்திரங்கள் அவ்வாறு செய்தார்களே, அவர்களை எல்லாம், இந்த நெட்டிசன்கள் எதுவுமே கேள்வி கேட்காததை என்னவென்று சொல்வது?
தமிழ் சினிமாவில்: வளரும்போதே இவருக்கு இவ்வளவு திமிரா என்றெல்லாம் கூட கேட்கிறார்கள், அப்படியானால் வளர்ந்த பின்னர் இவ்வாறு செய்தால் அது கேள்விகு உட்படுத்தப்படாதா? நெபோடிசம் அரசியலுக்கு வேண்டுமானால் கை கொடுக்கலாம், ஆனால் சினிமா உலகில் நிலைத்து நிற்க நெபோடிசம் கொஞ்சம் கூட கைகொடுக்காது. தமிழ் சினிமாவையே கட்டி ஆண்ட சிவாஜியின் பேரன் பெரிய வெற்றிக்காக இன்னமும் காத்துக் கொண்டுள்ளார். விஜயகாந்த் மகனுக்கும் அதே நிலைதான். 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் இருக்கும், அருண் விஜய்க்கு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு சில வெற்றிகளே உள்ளது. இப்படி அடுக்கிக் கொண்டு போகலாம். சமூகம் மாறதவரையில் இந்த சமூகத்தைப் பார்த்து வளரும் இளம் தலைமுறையினரை மற்றும் குற்றவாளிகளாக மாற்றுவது சரியல்லா!


Click it and Unblock the Notifications











