Phoenix Box Office: பாக்ஸ் ஆபிஸில் வென்றாரா விஜய் சேதுபதியின் மகன்.. பீனிக்ஸ் முதல் நாள் வசூல்!
சென்னை: நடிகர் விஜய் சேதுபதி மகன் சூர்யா சேதுபதி கதாநாயகனாக அறிமுகமான படம் பீனிக்ஸ். சண்டை பயிற்சி மாஸ்டர் அனல் அரசு கதை எழுதி, இயக்கியுள்ள இந்த படம் நேற்று அதாவது ஜூலை 4ஆம் தேதி ரிலீஸ் ஆனது. விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளாதாலே இந்த படத்தின் மீது ஆரம்பத்தில் இருந்து தனி கவனம் இருந்து வந்தது. இந்நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
சூர்யா சேதுபதி, சம்பத், வேதவர்ஷினி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான பீனிக்ஸ் படம் சில மாதங்களுக்கு முன்னரே ரிலீஸ் ஆகி இருக்க வேண்டிய படம். ஆனால் இந்த படத்தை ரிலீஸ் செய்யலாம் என படக்குழுவினர் முடிவு செய்தபோது எல்லாம், ஏதாவது பெரிய படம் ரிலீஸ் ஆக தயாரிக்கொண்டு இருந்ததால், இந்த படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை. இப்படி இருக்கும்போது ஒரு வழியாக நேற்று பீனிக்ஸ் படம் வெளியானது.
படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்வதற்கு முன்னரே பத்திரிகையாளர்களுக்கும் திரைத்துறையினருக்கும் படம் திரையிட்டு காட்டப்பட்டது. படத்தைப் பார்த்த திரைத்துறையினர் பலரும் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதியை பாராட்டினார்கள். குறிப்பாக படம் முழுக்க பல எமோஷன்களுடன், அதிரடியான சண்டைக் காட்சிகளும் உள்ளது. சூர்யா சேதுபதி தனது முதல் படத்திலேயே ஆக்ஷன் கதாநாயகனாக அறிமுகமானது மட்டுமல்லாமல், சிறப்பாக சண்டையும் செய்துள்ளார் என்று கூறினார்கள்.

விஜய்க்கு அடுத்து: குறிப்பாக இயக்குநர் விக்ரமன் கூறுகையில், விஜய் சினிமாவை விட்டு விலகுகிறார், அஜித் கார் ரேஸில் கவனம் செலுத்தி வருகிறார். விஷாலும் தொடர்ந்து படங்களில் நடிப்பது இல்லை. இப்படி இருக்கும்போது தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கதாநாயகர்களுக்கான வெற்றிடம் உருவாகிவிட்டது. அந்த இடத்தை நிரப்பக்கூடிய நபராக சூர்யா சேதுபதி இருப்பார் எனத் தெரிவித்தார். இவரது இந்த கருத்து படக்குழுவினருக்கு தெம்பைக் கொடுத்தது போல இருந்தது.
விஜய் சேதுபதி ரசிகர்கள்: படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக விஜய் சேதுபதியின் ரசிகர்கள் படத்தின் ரிலீஸ் நாளில் விஜய் சேதுபதி படம் ரிலீஸ் ஆவது போலவே கொண்டாடி வரவேற்றார்கள். படம் பார்த்த பலரும் கூறியது, படத்தில் சண்டைக் காட்சிகள் சிறப்பாக உள்ளது. பின்னணி இசையில் சாம் சி.எஸ் பிரமாதப்படுத்தி உள்ளார் என்று தெரிவித்தார்கள்.
முதல் நாள் வசூல்: படம் தமிழ்நாடு மற்றும் வெளி மாநிலங்களிலும் பரவலாக வெளியிடப்பட்டிருந்தாலும் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து சாக்.நிக் வலைதளம் தெரிவித்துள்ள தகவலின் படி, ரூபாய் 10 லட்சம் வசூல் செய்துள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. படத்தின் மொத்த தயாரிப்பு தொகையே ரூபாய் ஒரு கோடி எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் படம் இந்த வாரம் முழுவது இதே அளவுக்கு வசூலை பெற்றால் கூட பாக்ஸ் ஆபிஸில் தப்பித்துவிடும். ஏற்கனவே படத்தின் ஓடிடி பிசினஸ் உள்ளிட்டவை படக்குழுவுக்கு ஓரளவுக்கு திருப்தியைக் கொடுத்த நிலையில், பாக்ஸ் ஆபிஸ் வசூலைப் பொருத்துதான் படத்தின் வெற்றி தோல்வி உள்ளது.


Click it and Unblock the Notifications











