விஜய் மகன் ஹீரோவா வரப்போறாரோ இல்லையோ.. விஜய்சேதுபதி வீட்டில் வாரிசு நடிகர் ரெடியாம்!
சென்னை: மக்கள் செல்வன் என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வரும் நடிகர் விஜய்சேதுபதி தனது மகனை அடுத்ததாக ஹீரோவாக களமிறக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
புதுப்பேட்டை, நான் மகான் அல்ல உள்ளிட்ட பல படங்களில் துணை நடிகராக நடித்து வந்த விஜய்சேதுபதி இயக்குநர் சீனுராமசாமியின் தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

பீட்சா, சூது கவ்வும், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காதலும் கடந்து போகும் என வரிசையாக பல ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மாறி உள்ளார்.
ரொம்ப சிம்பிளான மனிதர்: யதார்த்தமாக மக்களில் ஒருவனாக சினிமாவில் நடித்து வரும் விஜய்சேதுபதியை மக்கள் செல்வன் என்றே ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஹீரோவாக நடிக்கத் தொடங்கி விட்டால் ஹீரோவாக மட்டுமே நடிக்க வேண்டும் என பலர் நினைத்துக் கொண்டிருக்கையில் வில்லனாக நடித்தாலும் மாஸ் காட்டலாம் என்றும் மீண்டும் ஹீரோவாகவும் நடிக்க முடியும் என்பதையும் நிரூபித்துக் காட்டியவர் விஜய்சேதுபதி.
ரஜினியுடன் பேட்ட, விஜய்யுடன் மாஸ்டர், கமல் உடன் விக்ரம் என வில்லனாக நடித்தாலும், விடுதலை படத்தில் விஜய்சேதுபதி வரும் ஒரே ஃபிரேமிலேயே சூரியை தூக்கி சாப்பிட்டு விடுகிறார்.
ஆடையில்லாமல் கால் மேல் கால் போட்டு அமர்ந்து: விடுதலை முதல் பாகத்தின் கிளைமேக்ஸில் விஜய்சேதுபதி கைது செய்யப்பட்ட பின்னர், இரண்டாம் பாகத்தில் கவுதம் மேனன் அவரையும் ஆடையில்லாமல் விசாரிக்கும் காட்சியில், ஆடையை உருவி மானபங்கம் படுத்தினாலும் மாஸ் காட்டுவேன் என்பது போல கால் மேல் கால் போட்டு அமர்ந்தபடி விஜய்சேதுபதி பேசும் அந்த காட்சியை பார்க்கவே அடுத்த பாகத்திற்கு ரசிகர்கள் வெயிட் செய்து வருகின்றனர்.
மகனை ஹீரோவாக்க: துணை நடிகர், குறும்பட ஹீரோ என கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து தமிழ் சினிமாவில் மட்டுமின்றி டோலிவுட், பாலிவுட் என அசத்தி வரும் விஜய்சேதுபதி அடுத்தபடியாக தனது மகன் சூர்யாவை ஹீரோவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

விஜய்சேதுபதியின் நானும் ரவுடிதான் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் சூர்யா சேதுபதி. அதன் பின்னர் சிந்துபாத் படத்தில் விஜய்சேதுபதி உடன் இணைந்து திருடனாக நடித்திருப்பார் சூர்யா. அதன் பிறகு சினிமாவில் தலை காட்டமால் வளர்ந்து வரும் சூர்யா தற்போது ஹீரோ மெட்டீரியலாக மாறும் முயற்சியில் முழு வீச்சில் இயங்கிக் கொண்டிருப்பதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
கூடிய விரைவில் பிரபல இயக்குநர் ஒருவர் படத்தில் தனது மகனை ஹீரோவாக அறிமுகப்படுத்தும் முயற்சியில் விஜய்சேதுபதியும் ஆர்வம் காட்டி வருகிறார் என்கின்றனர். டிஸ்னி ஹாட்ஸ்டாரில் விரைவில் வெளியாக உள்ள நடு சென்டர் வெப்சீரிஸிலும் விஜய்சேதுபதி மகன் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
விஜய் மகன்: நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்யும் தமிழ் சினிமாவில் கூடிய விரைவில் ஹீரோவாக போகிறார் எனக் கூறி வருகின்றனர். இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் விஜய்க்கு படம் பண்ண கதை சொல்ல வராமல் விஜய்யின் மகனுக்கு கதை சொல்ல வந்த கதையை விஜய்யே சொல்லி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார்.

வேட்டைக்காரன் படத்தில் விஜய்யுடன் இணைந்து நடனம் ஆடிய ஜேசன் சஞ்சய் அமெரிக்காவில் சினிமா சம்பந்தப்பட்ட படிப்பைத் தான் படித்து வருகிறார். மேலும், ஒரு சில குறும்படங்களை இயக்கி நடித்துள்ளார்.
சியான் விக்ரம் மகன் துருவ் விக்ரம், விஜய் மகன் ஜேசன் சஞ்சய், விஜய்சேதுபதியின் மகன் சூர்யா உள்ளிட்டவர்கள் அடுத்ததாக தமிழ் சினிமாவை ரூல் செய்ய பக்கா பிளான் உடன் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











