Viduthalai Part 2 Box Office: வசூலில் ஏற்றம் கண்டதா விடுதலை 2.. இரண்டு நாளில் எவ்வளவுதான் கலெக்‌ஷன்?

சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலரது நடிப்பில் நேற்று முன் தினம் அதாவது, டிசம்பர் 20ஆம் தேதி வெளியான படம் விடுதலை பாகம் 2. படத்தினைப் பார்த்த ரசிகர்கள் படத்தைக் கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக, வெற்றி மாறனின் இயக்கத்திற்கென இருக்கும் ரசிகர்கள் பட்டாளமும், விஜய் சேதுபதி மற்றும் சூரியின் ரசிகர்கள் பட்டாளமும் படத்தைக் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் படத்தின் முதல் இரண்டு நாள் வசூல் குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம். முதல் நாளை விடவும் படத்தின் வசூலில் இரண்டாவது நாளில் இந்திய அளவில் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

விடுதலை பாகம் 1இல் படம் சூரி கதாபாத்திரமான குமரேசன் கதாபாத்திரத்தை மைய்யபடுத்திய படமாக இருந்தது. ஆனால் விடுதலை பாகம் 2இல் முழுக்க முழுக்க, விஜய் சேதுபதி ஏற்று நடித்துள்ள வாத்தியார் கதாபாத்திரத்தின் இளமைக்காலத்தினை மைய்யமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினைப் பெற்றது. குறிப்பாக மஞ்சு வாரியரின் தோற்றமும், விஜய் சேதுபதியின் தோற்றமும் பெரும் கவனத்தினை ஈர்த்தது.

vijay sethupathi viduthalai part 2 vetri maran 2

படத்தின் ட்ரைலர் மற்றும் நடித்தவர்களின் தோற்றம் ரசிகர்களை ஒருபக்கம் ஈர்த்தால், படத்திற்கு இசை அமைத்துள்ள இளையராஜா, ரசிகர்களை உருகவைத்துவிட்டார். அதிலும் அவரே எழுதி பாடியுள்ள 'தினம் தினமும் உன் நெனப்பு’ பாடல் யூடியூப் தளத்தில் ட்ரெண்ட் ஆகும் அளவுக்கு ரசிகர்கள் அந்தப் பாடலை ரிப்பீட் மோடில் பார்த்துக் கொண்டாடினர்.

இளையராஜா: விடுதலை பாகம் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக தினம் தினமும் பாடல் தியேட்டரில் ஒலிக்கும்போது ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்த ஆரவாரம், இளையராஜாவை, ரசிகர்கள் கொண்டாடுவதை, பார்க்க முடிகின்றது.

விஜய் சேதுபதி: விடுதலை பாகம் 1 படம் ரிலீஸ் ஆனதுமே, படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பாராட்டினைப் பெற்றது. சூரியின் நடிப்பினை அனைவரும் பாராட்டினார்கள். விடுதலை பாகம் 2இல் வெற்றி மாறன் முழுக்க முழுக்க படத்தினை விஜய் சேதுபதியின் பெருமாள் கதாபாத்திரத்திற்காக உருவாக்கியுள்ளார். படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இது வசூலிலும் எதிரொலிக்கின்றது.

வசூல்: இப்படி பெரும் எதிர்பார்ப்பினை உண்டாக்கிய, விடுதலை பாகம் 2, தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் ரிலீஸ் ஆனது. படம் முதல் இரண்டு நாளில் இந்தியா முழுவதும் ரூபாய் 17 கோடிகள் பாக்ஸ் ஆஃபிஸில் வசூல் செய்திருக்கும் என பாக்ஸ் ஆஃபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதல் நாள் வசூலை விட இரண்டாவது நாளில் படத்தின் வசூல் கணிசமாக உயர்ந்துள்ளது. படத்தின் வசூல் வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என படக்குழு நம்பிக்கையுடன் உள்ளது.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள வசூல் கணக்கு என்பது, படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ வசூல் கணக்கு இல்லை. எனவே வாசகர்கள், இதனை படத்தின் அதிகாரப்பூர்வ வசூல கருதவேண்டாம். மேலும், இதில் குறிப்பிடப்பட்டுள்ள வசூல் என்பது, தோராயக் கணக்குதான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X