Viduthalai 2: விடுதலை 2வில் சில மாற்றம்.. நாளைக்கு ரிலீஸ்.. கடைசி நேரத்தில் ஷாக் கொடுத்த வெற்றிமாறன்
சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன், மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலர் நடிப்பில் நாளை வெளியாகவுள்ள படம் விடுதலை பாகம் 2. இந்தப் படம் ஏற்கனவே வெளியான விடுதலை பாகம் 1இன் அடுத்த பாகமாக உருவாகியுள்ளது. விடுதலை பாகம் 1க்கு இசை அமைத்த, இளையராஜாவே இந்தப் படத்திற்கும் இசை அமைத்துள்ளார். படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் படத்தில் இருந்து சுமார் 8 நிமிடக் காட்சிகளை நீக்கிவிட்டதாக இயக்குநர் வெற்றி மாறன் தெரிவித்துள்ளார். இது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
காமெடி நடிகராக மட்டும் இருந்து வந்த நடிகர் சூரி, விடுதலை பாகம் 1 படத்தின் மூலம், சூரி கதாநாயகனாக அறிமுகம் ஆனார். காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வந்த சூரியை கதாநாயகன் என்ற இடத்திற்கு தைரியமாக அழைத்து வந்த வெற்றி மாறன், அதில் சூரிக்கு பெரும் பாராட்டுக்களையும், சூரிக்குள் இருக்கும் கதாநாயகனையும் வெளியே கொண்டுவந்துள்ளார். விடுதலை பாகம் 1 படத்தில் சூரியின் நடிப்பினைப் பார்த்த ரசிகர்கள் பாராட்டினர்.

குறிப்பாக இந்தப் படத்தில் நடிப்பதற்காக, சூரி தனது உடல் எடையைக் கூட்டியது, மற்ற படங்களில் கமிட் ஆகாமல் இருந்தது என, இவரது அர்பணிப்புக்கு பலனாக, விடுதலை பாகம் 1 மாபெரும் வெற்றிப் படமாக மாறியது. இதுமட்டும் இல்லாமல், சர்வதேச திரைப்பட விழாக்களில் விடுதலை பாகம் 1 போட்டியிட்டு பல விருதுகளைக் குவித்தது. இந்தப் படத்தின் மூலம், சூரி, கொட்டுக்காளி, கருடன் போன்ற படங்களிலும் கதையின் நாயகனாக நடித்து அசத்தினார். இவரது நடிப்பில், ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள ஏழு மலை ஏழு கடல் படம் அடுத்த ஆண்டு பிப்ரவரிக்கு ரிலீஸ் ஆகவுள்ளதாக கூறப்படுகின்றது.
விஜய் சேதுபதி: விடுதலை பாகம் 2இல் பெரும்பான்மையான கதைக்களம், விஜய் சேதுபதி ஏற்று நடித்த, வாத்தியார் கதாபாத்திரத்தின், இளமைக்காலத்தினை மைய்யப்படுத்தியது. முதலில் இந்தப் படத்தில் நடிக்க விஜய் சேதுபதியை 8 நாட்கள் மட்டும் நடிக்க கூப்பிடு, கிட்டத்த 120 நாட்களுக்கு மேல் கால்ஷீட் வாங்கியுள்ளார் வெற்றிமாறன். இந்தப் படத்தின் வெற்றிக்கு ஒட்டுமொத்த படக்குழுவுமே பெரும், உழைப்பினைச் செலுத்தியுள்ளது.
அனுபவம்: படம் நாளை அதாவது டிசம்பர் 20ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், படத்தின் இயக்குநர் வெற்றி மாறன் வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களை கொஞ்சம் ஷாக் அடையச் செய்துள்ளது. அதாவது, படத்தின் பணிகள் இப்போதுதான் முழுமையாக நிறைவடைந்துள்ளது. இந்தப் படத்திற்காக பணியாற்றிய அனைவரும் பெரும் உழைப்பைச் செலுத்தியுள்ளார்கள். இந்தப் படம் எங்களுக்கு பல விஷயங்களைக் கற்றுக் கொடுத்தது. ஒரு அனுபவமாக எங்களுக்கு விடுதலை நல்ல படம்.
Thank you #VetriMaaran sir for everything ❤️#ViduthalaiPart2 from tomorrow in theatres
— VijaySethupathi (@VijaySethuOffl) December 19, 2024
An @ilaiyaraaja Musical #ViduthalaiPart2FromDec20
@sooriofficial @elredkumar @rsinfotainment @GrassRootFilmCo @ManjuWarrier4 @BhavaniSre @anuragkashyap72 #Kishore @menongautham… pic.twitter.com/UJZtbE6m7N
8 நிமிடங்கள்: படம் பார்ப்பதற்கு எப்படி உள்ளது என்பதை ரசிகர்களாகிய நீங்கள்தான் பார்த்துவிட்டுச் சொல்லவேண்டும். படம் பார்க்கும் ரசிகர்களுக்கு மேலும் படத்துடன் ஒன்றி இருக்க வைக்க, படத்தில் இருந்து, சுமார் 8 நிமிடக் காட்சிகளை வெட்டி எடுத்துவிட்டோம். இதுபோன்ற படத்தை ஆதரித்த அனைவருக்கும் பெரிய நன்றிகள்" எனத் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











