twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    "நாலு படம் ஓடலைன்னா நக்கிட்டுத்தான் போகணும்.." - கோபமாகப் பேசிய விஜய் சேதுபதி!

    By Vignesh Selvaraj
    |

    Recommended Video

    கீ படம் ஆடியோ லாஞ்சில் ஆதங்கமாக பேசின விஜய் சேதுபதி.

    சென்னை : அறிமுக இயக்குநர் காலீஸ் இயக்கத்தில் ஜீவா, நிக்கி கல்ராணி ஆகியோர் நடிக்கும் 'கீ' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது.

    இந்த நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி சினிமா நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்களின் யதார்த்தத்தைப் பேசினார்.

    விஜய் சேதுபதி கோபமாகப் பேசினாலும், அவரது பேச்சு பெரும்பாலானோரைக் கவர்ந்தது. உண்மையான அக்கறையுடன் பேசியதாகப் பலரும் தெரிவித்தனர்.

    நாமே தான் தீர்த்துக்கணும்

    நாமே தான் தீர்த்துக்கணும்

    விஜய் சேதுபதி பேசியதாவது, "நம்ம பிரச்னையை நாம் பேசித் தீர்த்துக்கணும். பொது இடங்களுக்குக் கொண்டுவந்து அடிச்சிக்கக் கூடாது. இப்போதெல்லாம் சினிமாக்காரன் என்றாலே ஒரு மாதிரி பார்க்கிறார்கள். தரம் தாழ்த்திப் பேசுகிறார்கள். மொத்தமாக சினிமாக்காரர்களை கை காட்டிப் பேசும்போது வருத்தமாக உள்ளது.

    உயிர் போய் உயிர் வருது

    உயிர் போய் உயிர் வருது

    சினிமாகாரர்களை குறைவாக நினைப்பவர்கள் சினிமாவுக்கு வந்து ஒரு படம் எடுத்துப் பாருங்கள். தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர்களுக்குரிய பிரச்னைகள் உங்களுக்குத் தெரியும். ஒரு படம் எடுத்து முடிக்கும்போதும் உயிர் போய் உயிர் வருகிறது.

    தயாரிப்பாளர்களை பாராட்ட வேண்டும்

    தயாரிப்பாளர்களை பாராட்ட வேண்டும்

    ஒரு படம் ஓடும் என்ற நம்பிக்கையில்தான் எல்லோரும் வேலை செய்கிறோம். படம் எடுக்க முயற்சிக்கும் தயாரிப்பாளரை நாம் பாராட்ட வேண்டும். அந்தப் படம் ஓடவில்லையென்றால் அவருக்குதான் பெரும் பாதிப்பு.

    தயாரிப்பாளர்களின் தைரியம்

    தயாரிப்பாளர்களின் தைரியம்

    எடுக்கும் படத்தை வைத்துக் கொண்டு தயாரிப்பாளரால் எதுவும் செய்ய முடியாது. கண்ணுக்குத் தெரியாத ஒரு தயாரிப்பை நம்பி பெரிய அளவில் பணத்தை முதலீடு செய்ய வருகிற தயாரிப்பாளர்களின் தைரியத்தை பாராட்ட வேண்டும்.

    கண்டுகொள்ள ஆள் இருக்காது

    கண்டுகொள்ள ஆள் இருக்காது

    நாலு படங்கள் ஓடவில்லையென்றால் யாரும், யார் வீட்டுப் பக்கமும் வரவே மாட்டார்கள். நடிகனை சீண்ட மாட்டார்கள். அப்போது நடிகன் என்ன கத்திப் பேசினாலும் கண்டுகொள்ள ஆள் இருக்காது. வெற்றியடைந்தால், ஓடிக்கொண்டே இருந்தால்தான் இங்கு மதிப்பு.

    நக்கிட்டுத்தான் போகணும்

    நக்கிட்டுத்தான் போகணும்

    பவர் வைத்துத்தான் இங்கு மரியாதை. அதுவும் போய்விட்டால், நாம் சோர்ந்துபோனால் அந்த இடத்திற்கு இன்னொருத்தன் வருவான். அப்புறம் நாம நக்கிட்டுத்தான் போகணும். நான் அனுபவத்தில், அறிவில் சின்னப் பையன். நான் தப்பா பேசியிருந்தா என்னை மன்னிச்சுக்கோங்க." எனப் பேசினார் விஜய் சேதுபதி.

    English summary
    Jeeva and Nikki galrani plays lead roles in the movie 'Kee'. Vijay Sethupathi talked reality of cinema artists life in the audio launch event of 'Kee'. "If four films are getting flop, nobody will come to our home side", says Vijay Sethupathi.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X