விடிவி கணேஷூக்கு ஆந்திராவுல பல பங்களா இருக்கு.. ஸ்லம் டாக் மேடையில் ரகசியத்தை உடைத்த விஜய் சேதுபதி
சென்னை: இயக்குநர் பூரி ஜெகந்நாத் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள 'ஸ்லம் டாக் - 33 டெம்பிள் ரோடு' திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய விஜய் சேதுபதி, மேடையையே தனது கலகலப்பான பேச்சால் அதிர வைத்தார்.
விழாவில் பேசிய விஜய் சேதுபதி, படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள கன்னட ஸ்டார் துனியா விஜய். இயக்குநர் பூரி ஜெகந்நாத் அவர்கள் மீதுள்ள நட்புக்காகவும், மரியாதையாகவும் இந்தத் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அவருடன் இணைந்து நடித்ததில் எனக்கு மகிழ்ச்சி. ஒவ்வொரு காட்சியின்போதும் இயக்குநர் என்ன சொல்கிறார் என்பதை அப்படியே உள்வாங்கி, திரையில் சிறப்பாகக் கொண்டு வரக்கூடிய அசாத்திய கலைஞர் அவர். சில காரணங்களால் அவரால் இந்த நிகழ்ச்சிக்கு வர முடியவில்லை. அவர் இங்கு வரவில்லை என்றாலும், எங்களுடன் இணைந்து நடித்ததற்காக இந்த மேடையில் அவருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்னசென்ட் கேடி: விடிவி கணேஷை விஜய்சேதுபதி பேசியதால் அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது. விடிவி கணேஷ் அண்ணனை நேரில் பார்ப்பதற்கு முன்னாடி அவர் மீது எனக்கு ஒருவிதமான ஒப்பீனியன் இருந்தது. ஆனால், இந்தத் திரைப்படத்தில் அவரோடு சேர்ந்து நடித்த பிறகு என் அபிப்ராயமே மொத்தமாக மாறிவிட்டது. பார்க்க ரொம்ப இன்னசென்டாகத் தெரிவாரு, ஆனா அவர் பயங்கரமான கேடித்தனமான நடிகர். சுவாரசியமாக நடிப்பதில் கில்லாடி. இப்போதெல்லாம் அவர் தமிழ் படங்களை விட தெலுங்கு படங்களில் தான் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். ஆந்திராவில் ஏகப்பட்ட பங்களாக்களை விலைக்கு வாங்கிப் போட்டிருக்கிறார். பத்திரிகையாளர்களே... தயவுசெய்து இதை மறந்துவிடாமல் அப்படியே செய்தியாக எழுதி விடுங்கள் என்றார்.
சாப்பாடு போடுவதில் கில்லாடி: இப்படத்தின் தயாரிப்பாளரும், பிரபல முன்னாள் நடிகையுமான சார்மி கவுர் குறித்து நெகிழ்ச்சியாகப் பேசிய விஜய் சேதுபதி. "சார்மி மேடம் வீட்டிற்கு எப்போது போனாலும் சரி, நிச்சயமாகச் சாப்பாடு சாப்பிடாமல் வெளியே வர முடியாது. யார் எப்ப போனாலும் தட்டு நிறைய சாப்பாடு போட்டுத்தான் அனுப்புவார். அதுமட்டுமில்ல, தெலுங்கு படங்கள்ல இருக்குற பிரம்மாண்டம் மாதிரியே, அவர் போடுற சாப்பாடும் அம்புட்டு பிரம்மாண்டமாக இருக்கும் எனத் தயாரிப்பாளரின் உபசரிப்பைப் பாராட்டிப் பேசினார். விஜய் சேதுபதியின் இந்த கலகலப்பான பேச்சு 'ஸ்லம் டாக்' டீசர் வெளியீட்டு விழாவை ஒட்டுமொத்த மீடியாக்களின் ஹாட் டாபிக்காக மாற்றியுள்ளது


Click it and Unblock the Notifications