இனி தண்ணி காற்றை வெச்சித்தான் அரசியல்.. க/பெ ரணசிங்கம் டீசர் ரிலீஸ் !

சென்னை : சாதி மத அரசியலை தாண்டி இனி தண்ணியையும் காற்றையும் வெச்சித்தான் மொத்த உலக அரசியலும் நடக்க போகுது என தெறிக்கும் வசனங்களுடன் வெளியாகி உள்ளது க/பெ ரணசிங்கம் டீசர்.

Recommended Video

Actor Sathish celebrates his birthday | Friendship, Losliya, Annathe, Rajinikanth

க/பெ ரணசிங்கம் படத்தின் முதல் பார்வை நேற்று வெளியானதை அடுத்து இன்று அந்த படத்தின் டீஸர் வெளியானது . இதை அறம் படத்தை தயாரித்த கொட்டபாடி ஜெ ராஜேஷ் இப்படத்தையும் தயாரித்து இருக்கிறார்.

இதில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார், தர்மதுரையை தொடர்ந்து இவர்கள் இருவரும் இப்படத்தில் இணைகின்றனர். தர்மதுறை படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது என்பது குறிப்பிடத்தக்கது .

ஒரு உண்மை சம்பவம்

ஒரு உண்மை சம்பவம்

ரணசிங்கம் படம் உண்மையில் நடந்த சில சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கபட்டது என சொல்லப்படுகிறது. நம் நாட்டில் நடக்கும் தண்ணீர், நிலம். காற்று போன்றவற்றில் அப்பாவி மக்களை சுரண்டி கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகளையும், கார்பரேட் முதலைகளையும் தனியொரு ஆளாக மக்களின் துணையோடு நின்று போராடும் ஒரு சமூக போராளியாக விஜய்சேதுபதி நடித்திருக்கிறார். எதார்த்த நடிப்பில் மக்கள் மனதில் இடம் பிடித்த விஜய்சேதுபதி, இந்த படத்திலும் தன் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் .

பரிட்சயமான முகங்கள்

பரிட்சயமான முகங்கள்

விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷுடன் இணைந்து நெறியாளரும் மற்றும் நடிகருமான ரங்கராஜ் பாண்டே இதில் மாவட்ட ஆட்சியராக வருகிறார், கானா படத்தை இயக்கிய அருண்ராஜ் காமராஜா என நமக்கு பரிட்சயமான பல முகங்கள் இதில் நடித்துள்ளனர். அறிமுகமான முகங்கள் நடித்தால் அப்படத்திற்கு தனியாக விளம்பரம் ஏதும் தேவையில்லை.

சீறும் ஐஸ்வர்யா ராஜேஷ்

சீறும் ஐஸ்வர்யா ராஜேஷ்

அதிகாரத்தோட உச்சாணி கொம்புல இருப்பவர்களுக்கு நாம அடிபட்ட வலியை கொஞ்சம் கூட குறையாம அப்படியே புரிய வெக்கணும் என ஐஸ்வர்யா ராஜேஷும் வசனத்தில் அதிரடி காட்டியுள்ளார். விஜய் சேதுபதி எப்போதும் தனக்கு என ஒரு பாணியை கடைபிடித்து வருகிறார். ஓவர் பஞ்ச் டயலாக் எல்லாம் பேசாமல் எதார்த்தமான வார்த்தைகளை பேசி அனைவரையும் கவர்வது அவரது ஸ்டைல்.

கார்ப்பரேட் முதலாளிகள்

கார்ப்பரேட் முதலாளிகள்

நம்ம ஊரு பெண்கள் தண்ணீருக்காக தள்ளுவண்டிய தள்ளிக்கிட்டு இருக்காங்க ஆனா அந்த கரண்ட்டு கம்பனிக்காரன் ஒரு நாளுக்கு ஒரு லட்சம் லிட்டர் தண்ணி எடுக்கிறான் பிளேட்டு கழுவ என எல்லோருடைய அடிப்படை தேவையான தண்ணீர் பிரச்சனையை இந்த படத்தில் முக்கியமாக பேசியுள்ளனர் .மக்களின் அத்யாவசிய தேவையான தண்ணீர், காற்றை பற்றி பேசியிருப்பது படத்திற்கு கூடுதல் பலம். சராசரி மக்களுக்கு இப்படத்தை கொண்டு செல்வதற்கு ஒரு அழகான யுக்தியை கையாண்டு உள்ளனர் என்றே சொல்லவேண்டும் .

கொட்டபடி ஜெ ராஜேஷ்

கொட்டபடி ஜெ ராஜேஷ்

இந்த படத்தை அறிமுக இயக்குனர் வீரபாண்டி அவர்கள் இயக்கியுள்ளார். நயன்தாரா நடித்த அறம் படத்தை தயாரித்த அதே தயாரிப்பாளர் கொட்டபடி ஜெ ராஜேஷ் அவர்கள் தான் இந்த படத்தையும் தயாரித்துள்ளார். ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை காப்பாற்றுவதே அறம் படத்தின் கதை, ஏழைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்றான ஆழ்துளை கிணற்றை பற்றி திரைப்படம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது . நயனும் தன்னுடைய கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்து இருப்பார்.

மிரட்டலான டீசர்

மிரட்டலான டீசர்

டீஸரின் முடிவில் ஐஸ்வர்யா ராஜேஷை குடும்ப அட்டையிலிருந்து பெயரை நீக்கிவிடுவேன் என மிரட்டும் தோணியில் பேசும் அதிகாரியை சும்மா டாரு டாரக கிழித்து தொங்க விடுவார். ரணசிங்கத்தின் கோபம் தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு விவசாயிக்குள்ளும் கொதிக்கும் கோபம். மக்கள் இடையே இப்படம் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதாக திரைப்பட வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X