Merry Christmas - விஜய் சேதுபதி நடிக்கும் மெர்ரி கிறிஸ்துமஸ்.. எப்போ ரிலீஸ் தெரியுமா?

மும்பை: Merry Christmas (மெர்ரி கிறிஸ்துமஸ்) விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் நடித்திருக்கும் மெர்ரி கிறிஸ்துமஸ் படத்தில் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடித்துக்கொண்டிருந்தவர் விஜய் சேதுபதி. பிறகு தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படம் மெகா ஹிட்டானதை அடுத்து தமிழில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அமைந்தன. அதன்படி அவர் நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், பீட்சா, சூதுகவ்வும் என வரிசையாக அவர் நடித்த படங்கள் ஹிட்டடித்தன.

Vijay Sethupathi Starrer Merry Christmas Movie Will Released on December 15

டெம்ப்ளேட்டை உடைத்த விஜய் சேதுபதி: இதனையடுத்து தமிழில் முன்னணி ஹீரோவாக உயர்ந்தார். இருப்பினும் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என அடம்பிடிக்காமல் கதைக்கு தேவை என்றால் எந்த கேரக்டரும் செய்ய தயார் என்ற மனப்பான்மையில் பேட்ட,விக்ரம், மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் வில்லன் கதாபாத்திரத்தையும் ஏற்க ஆரம்பித்தார். அப்படி அவர் நடித்த ரோல்களுக்கும் ரசிகர்களிடம் ரெஸ்பான்ஸ் கிடைத்தது.

ஹிந்தியில் விஜய் சேதுபதி: தமிழில் மட்டும் வலம் வந்துகொண்டிருந்த விஜய் சேதுபதி தெலுங்கில் சைரா நரசிம்மா ரெட்டி என்ற படத்தின் மூலம் தெலுங்கிலும் அடியெடுத்து வைத்தார். தொடர்ந்து ஹிந்தியில் தற்போது நுழைந்திருக்கிறார் விஜய் சேதுபதி. அதன்படி அவர் நடித்த ஃபர்ஸி வெப் சீரிஸ் அமேசான் ப்ரைமில் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. அதில் விஜய் சேதுபதி காவல் துறை அதிகாரியாக நடித்திருந்தார். குறிப்பாக தனது சொந்த குரலிலேயே ஹிந்தியில் டப்பிங் பேசியும் அசத்தினார். சீரிஸ் மெகா ஹிட்டடித்தது.

மெர்ரி கிறிஸ்துமஸ்: ஃபர்ஸ் வெப் சீரிஸில் கமிட்டாவதற்கு முன்னதாகவே மெர்ரி கிறிஸ்துமஸ் என்ற ஹிந்தி படத்தில் கமிட்டானார் விஜய் சேதுபதி. ரமேஷ் தவ்ராணி, ஜெயா தவ்ராணி, சஞ்சய் ரவ்த்ரே, கேவால் கார்க் ஆகியோர் டிப்ஸ் ஃபிலிம்ஸ் மற்றும் மேட்ச்பாக்ஸ் பிக்சர்ஸ் சார்பில் மெரி கிறிஸ்துமஸ் படத்தை தயாரித்துள்ளனர்.

ஜானி கதார், பத்லாபூர் மற்றும் அந்தாதுன் படங்களை இயக்கிய ஶ்ரீராம் ராகவன் படத்தை இயக்கியுள்ளார். படமானது ஹிந்தி மற்றும் தமிழ் என இரண்டு மொழிகளில் தயாராகிறது. ஸ்ரீராம் ராகவனுக்கு இது முதல் தமிழ் படம் என்பதும்; கத்ரீனா கைஃப் இதன் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வெவ்வேறு நடிகர்கள்: மெர்ரி கிறிஸ்துமஸ் படம் இரண்டு மொழிகளில் உருவாவதால் வெவ்வேறு துணை நடிகர்களுடன் படமாக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ் பதிப்பில் ராதிகா சரத்குமார், சண்முகராஜா, கவின் ஜெய் பாபு மற்றும் ராஜேஷ் வில்லியம்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர். ஹிந்தி பதிப்பில் அதே வேடங்களில் சஞ்சய் கபூர், வினய் பதக், பிரதிமா கண்ணன், டின்னு ஆனந்த் ஆகியோர் இணைந்து நடித்திருக்கின்றனர்.

எப்போது ரிலீஸ்?: இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதன்படி படமானது உலகம் முழுவதும் டிசம்பர் 15ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. மேலும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இப்படம் சிறந்த பொழுதுபோக்கு படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே இந்தப் படத்தில் அஸ்வினி கல்சேகர் மற்றும் ராதிகா ஆப்தே ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கின்றனர். மேலும் ஃபரி என்ற குழந்தை நட்சத்திரமும் இப்படத்தின் மூலம் அறிமுகமாவது குறிப்பிடத்தக்கது. முன்னதாக மெர்ரி கிறிஸ்துமஸ் கடந்த வருடம் டிசம்பர் மாதமே வெளியாகவிருந்தது நினைவுகூரத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X