கமலின் “பேசும்படம்“ ஸ்டைலில் மற்றொரு படம்.. விஜய்சேதுபதியின் “காந்தி டாக்ஸ்“ ஷூட்டிங் அப்டேட்!

சென்னை : நடிகர் விஜய்சேதுபதி நடிக்கும் "காந்தி டாக்ஸ்" திரைப்படம் குறித்த ஹாட் அப்டேட் வெளியாகி உள்ளது.

6 மொழிகளில் உருவாகி வரும் இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

கிஷோர் பாண்டுரங் பலேகர் இயக்க உள்ள இத்திரைப்படத்தை ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

காத்துவாக்குல ரெண்டு காதல்

காத்துவாக்குல ரெண்டு காதல்

நடிகர் விஜய் சேதுபதி , விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தில் நயன்தாரா, சமந்தா,யோகிபாபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

மற்றொரு வெற்றிப்படம்

மற்றொரு வெற்றிப்படம்

பகலில் டிரைவராகவும் இரவில் பவுன்சராகவும் வேலைபார்க்கும் விஜய் சேதுபதி, கண்மணி,கதிஜா என்ற இரண்டு பெண்களையும் காதலிக்கும் ரோலில் மாஸாக நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் விஜய் சேதுபதிக்கு கச்சிதமாக பொருந்தி இருந்தது. அனிருத்தின் இசை படத்திற்கு மேலும் வலுசேர்த்துள்ளது. காத்துவாக்குல ரெண்டு காதல் விஜய் சேதுபதியின் மற்றொரு வெற்றிப்படமாக அமைந்துள்ளது.

6 மொழிகளில்

6 மொழிகளில்

நடிகர் விஜய் சேதுபதி அடுத்து நடிக்கும் "காந்தி டாக்ஸ்" திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கி உள்ளது. இந்தியில் தயாராகும் இந்த படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி மொழிகளிலும் வெளியாக உள்ளது. கிஷோர் பாண்டுரங் பலேகர் என்ற மராத்தி இயக்குநரின் இயக்கத்தில் உருவாக உள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளார்.

மௌன படம்

மௌன படம்

அரவிந்த்சாமி, அதிதீ ராவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால் இத்திரைப்படம் ஒரு மௌன திரைப்படமாகும். 1987ம் ஆண்டு கமல், அமலா நடித்த பேசும்படத்திற்கு பிறகு வசனமே இல்லாத ஒரு படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். விஜய் சேதுபதியின் காந்தி டாக்ஸ் திரைப்படமும் வெற்றிப்படமாக அமைய ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

செம பிஸி

செம பிஸி

விஜய் சேதுபதி பேமிலி மேன் வெப் சீரிஸ் இயக்குனர்கள் இயக்கத்தில் ஃபர்ஸி எனும் புதிய வெப் சீரிஸில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். இதனைத்தொடர்ந்து தற்போது நடிகை கத்ரீனா கைப் உடன் இணைந்து மேரி கிறிஸ்மஸ் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். மேலும் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகிவரும் விடுதலை திரைப்படத்தில் நடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X