விஜய் சேதுபதி பிறந்தநாள் அதுவுமா இவ்வளவு மோசமா?.. படம் பெயர் Slum Dog.. விழ ஆரம்பிக்கும் அடி
சென்னை: விஜய் சேதுபதி மீண்டும் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்திருப்பது அவரது ரசிகர்களுக்கு பெரிய மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. மிஷ்கின் இயக்கத்தில் ட்ரெய்ன் படத்தில் நடித்து முடித்திருக்கும் அவர்; பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் நடிக்க கமிட்டானார். சார்மி ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தின் பெயர் ஸ்லம் டாக் 33 டெம்ப்பிள் ரோட் (Slum Dog 33 Temple Road) என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த பெயர் சர்ச்சையையும் சந்தித்திருக்கிறது.
இந்திய அளவில் பெயர் பெற்ற நடிகராக இருக்கிறார் விஜய் சேதுபதி. ஹீரோவாக நடித்தபோது கொஞ்சம் சரிந்த மார்க்கெட்டை வில்லனாக நடித்து சரிக்கட்டினார். மேலும் கெஸ்ட் ரோல்களும் செய்ய ஆரம்பித்தார். வில்லனாக அவர் அப்ளாஸை அள்ள ஆரம்பித்த பிறகு தொடர்ந்து அதே மாதிரியான ரோல்களை செய்ய அழைப்புகள் அதிகமாகின. இதனை பார்த்து அச்சமடைந்த சேதுவின் ரசிகர்கள் மீண்டும் ஹீரோவாகவே நடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்கள். சேதுவுக்கும் அதன் முக்கியத்துவம் புரிந்திருந்ததால் மீண்டும் பழைய ட்ராக்குக்கு வந்தார்.
மெகா ஹிட் மகாராஜா: அந்தவகையில் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் நடித்த மகாராஜா திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. இந்தியாவில் மட்டுமின்றி சீனாவிலும் படத்துக்கு ஏகோபித்த ரெஸ்பான்ஸ். தொடர்ந்து ஏஸ் படத்தில் நடித்து தோல்வி கண்டார். ஒரு ஹிட் ஒரு தோல்விக்கு பிறகு மிஷ்கின் இயக்கத்தில் ட்ரெய்ன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்தப் படம் அவரது கரியரில் எப்படிப்பட்ட நினைவுகளை கொடுக்கப்போகிறது என பொறுத்திருந்து பார்க்கலாம்.

பூரியுடன் சேது: சூழல் இப்படி இருக்கு பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் நடிக்க கமிட்டானார். பூரி தெலுங்கு திரையுலகில் புகழ் பெற்ற இயக்குநராக இருந்தாலும் இப்போது ஃபார்ம் அவுட்டில் இருக்கிறார். எனவே அவர் கூட்டணியில் விஜய் சேதுபதி இணைந்தது பல்வேறு பேச்சுக்களை எழுப்பின. ஆனால் திறமையை எப்போதும் சேதுபதி உறுதியாக கூட்டணி அமைத்தார். ஜோடியாக சார்மி நடிக்க; ஹர்ஷவர்தன் இசையமைக்கிறார்.
படத்தின் பெயர் ஸ்லம் டாக்: இந்நிலையில் விஜய் சேதுபதி இன்று தனது 48ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதனையொட்டி படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி படத்துக்கு ஸ்லம் டாக் 33 டெம்ப்பிள் ரோட் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் இன்று அறிவிப்பு வந்திருக்கிறது. போஸ்டரில் ரத்த கறை படிந்த நீளமான கத்தியை கையில் பிடித்தபடி நிற்கிறார். இதனை பார்க்கையில் இப்படத்தில் வயலன்ஸ் அதிகம் இருக்குமோ என்ற சந்தேகமும் பலரிடம் எழுந்திருக்கிறது. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க படத்தின் பெயர் சோஷியல் மீடியாக்களில் விவாதமாகவும் மாறியுள்ளது.
என்ன விவாதம்?: அதாவது படத்தின் பெயரை பார்த்த ரசிகர்கள் அது என்ன ஸ்லம் டாக் என்று வைத்திருக்கிறார்கள். இப்போதுதான் தென்னிந்திய சினிமாக்களில் சேரி பகுதியில் இருப்பவர்களின் வாழ்வியலை நேர்மையாகவும், அவர்களது இன்னொரு பக்கத்தையும் மாற்றி படம் எடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்கள் மீது காலங்காலமாக குத்தப்பட்ட முத்திரைகளை அழிப்பதற்கான வேலைகள் திரையில் நடக்க தொடங்கியிருக்கும்போது இவர்கள் சேரியை நாயுடன் ஒப்பிட்டு பெயர் வைத்திருப்பது ரசிக்கும்படி இல்லை. இதையெல்லாம் படக்குழு கவனத்தில் எடுத்துக்கொள்ளாத என பல கேள்விகள் எழுந்திருக்கின்றன.


Click it and Unblock the Notifications











