வடசென்னையில் விஜய் சேதுபதி நடிக்க வேண்டியது... இயக்குனர் வெற்றிமாறன் பகிர்ந்த தகவல்!

சென்னை: இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகும் திரைப்படங்கள் அனைத்தும் இந்திய அளவில் மிகப் பெரிய கவனத்தைப் பெற்று வருகிறது

தனுஷுடன் இணைந்து பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் என இயக்கிய அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதை தொடர்ந்து மீண்டும் வெற்றிமாறன் தனுஷ் கூட்டணி இணைய உள்ளது

இந்த நிலையில் தனுஷ் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற வட சென்னை படத்தில் நடிகர் விஜய் சேதுபதி தான் முதலில் நடிக்க இருந்ததாக வெற்றிமாறன் தனியார் யூடியூப் சேனல் பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

நடிகர்கள் ஆவலுடன்

நடிகர்கள் ஆவலுடன்

உண்மைக்கு மிக அருகில் இருக்கின்றவாறு கதைகளை இயக்கி அதை வெற்றிப் படங்களாக ரசிகர்களுக்கு பறைசாற்றி வரும் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களும் மிகப்பெரிய வெற்றிகளை குவித்து வருகிறது. அது மட்டுமல்லாமல் அவை அனைத்தும் இந்திய அளவில் மிகப் பெரிய கவனத்தை பெறுவதால் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என பெரும்பாலான நடிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

சூரி முதல் முறையாக ஹீரோ

சூரி முதல் முறையாக ஹீரோ

இதுவரை காமெடி நடிகராக அனைவரும் பார்த்து வந்து நடிகர் சூரி முதல் முறையாக ஹீரோவாக நடிக்கும் திரைப்படம் விடுதலை. சத்தியமங்கலம் காட்டுப் பகுதிகளில் நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது மேலும் இதில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமாரின் தங்கை இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் மிகவும் வித்தியாசமான கதை களத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் சூரி போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார்

ஜல்லிக்கட்டு விளையாட்டை

ஜல்லிக்கட்டு விளையாட்டை

அசுரன் வெற்றிக்கு பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் அடுத்ததாக உருவாக இருக்கும் படம் வாடிவாசல். அனைவர் மத்தியிலும் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது தமிழர்களின் கலாச்சாரத்தையும் பண்பாடுகளையும் கொண்ட ஜல்லிக்கட்டு விளையாட்டை மையப்படுத்தி இப்படம் உருவாக உள்ளது. படப்பிடிப்பு மதுரையில் தொடங்கப்பட்டு நடைபெற்றுக் கொண்டுள்ளது . தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு இப்படத்தை தயாரித்து வருகிறார்.

முதலில் விஜய்சேதுபதி

முதலில் விஜய்சேதுபதி

ஒவ்வொரு படத்துக்கும் வித்தியாசம் காட்டி வரும் வெற்றிமாறன் வடசென்னையை வித்தியாசமான கேங்ஸ்டர் படமாக இயக்கி இருப்பார். உண்மைத் தன்மைக்கு மிக அருகில் இருக்கின்றவாறு எடுக்கப்பட்ட வடசென்னை படத்தில் ராஜன் கதாபாத்திரத்தில் இயக்குனர் அமீர் மிரட்டியிருப்பார். அமீருக்கு இந்த படம் மிகப்பெரிய பெயரை பெற்று தந்தது. இந்த நிலையில் அமீர் நடித்த ராஜன் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது விஜய்சேதுபதி தானம்.

தெலுங்கு நடிகர் ரவி தேஜா

தெலுங்கு நடிகர் ரவி தேஜா

விஜய் சேதுபதியிடன் வடசென்னை படத்தின் கதையை கூறியபோது ஓகே சொன்னாராம் அதன் பிறகு படப்பிடிப்புக்கு சென்றபோது டேட் பிரச்சினை காரணமாக வட சென்னை படத்தில் விஜய்சேதுபதி நடிக்க முடியாமல் போனதால் தெலுங்கு நடிகர் ரவி தேஜாவையும் ராஜன் கதாபாத்திரத்தில் நடிக்க அணுகியுள்ளனர் அப்போது அவருக்கும் டேட் பிரச்சினை இருந்ததால் இறுதியாக அமீர் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தனர். இந்த தகவலை இயக்குனர் வெற்றிமாறன் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X