விஜய் சேதுபதிக்கு நடிப்பு கற்றுத் தந்த நடிகை....வைரலாகும் வீடியோ

சென்னை : பல மொழிகளிலும் புகழ்பெற்ற நடிகராகி வருகிறார் விஜய் சேதுபதி. பலராலும் மதிக்கப்படும் நடிகராகவும் இருந்து வருகிறார். ஹீரோ, வில்லன், சிறப்பு தோற்றம் என எதை தேர்வு செய்தாலும் அதில் முழு அர்ப்பணிப்புடன் பணியாற்ற கூடியவர் என பெயர் வாங்கி உள்ளார்.

கற்றுக் கொள்வதிலும், தன்னை அப்டேட் செய்து கொள்வதிலும் அவருக்கு இருக்கும் ஆர்வம் சினிமா துறையை சேர்ந்த பலரையும் வியப்படைய வைத்துள்ளது. தற்போது விஜய் சேதுபதி பாடம் படிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

மகனுடன் பாடம் கற்ற விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி, தனது மகன் சூர்யாவும் தரையில் அமர்ந்து நடிப்பு பாடத்தை கற்றுக் கொண்டுள்ளனர். அதிலும் விஜய் சேதுபதி, ஒவ்வொரு விஷயங்களையும் உள்வாங்கிக் கொண்டு, பின்பற்றும் விதம் அனைவரையும் கவர்ந்துள்ளது.

நடிக்க சொல்லி தந்த நடிகை

நடிக்க சொல்லி தந்த நடிகை

விஜய் சேதுபதிக்கு நடிப்பு கற்றுக் கொடுத்தது, புகழ்பெற்ற நடிகை பூஜா தேவரியா தான். இவர் விஜய் சேதுபதியுடன் இணைந்து இறைவி, குற்றமே தண்டனை உள்ளிட்ட படங்களில் நடித்தவர் தான் பூஜா. இந்த வீடியோவில் பூஜா செய்து காட்ட சொல்வதை விஜய் சேதுபதியும், அவரது மகனும் செய்து காட்டுவது ரசிக்கும் படியாக அமைந்துள்ளது.

விஜய் சேதுபதியின் சேட்டை

விஜய் சேதுபதியின் சேட்டை

நடிப்பு பாடத்துடன் இடையிடையே விஜய் சேதுபதி பல சுவாரஸ்யமான சேட்டைகள், கிரிக்கெட் விளையாடுவது போன்று பவுலிங் போடுவது போன்ற சைகைகளையும் செய்துள்ளார். பவுலிங் போடுவதையும் விஜய் சேதுபதி கற்றுக் கொண்டுள்ளார்.

800 படத்திற்காக பயிற்சி

800 படத்திற்காக பயிற்சி

விஜய் சேதுபதியின் இந்த ரசிக்கும்படியான செய்கைகளால் இந்த வீடியோ தாறுமாறாக வைரலாகி வருகிறது. தற்போது அவர் நடித்து வரும் 800 என்ற படத்திற்காக தான் இந்த நடிப்பு பாடத்தை கற்றுக் கொண்டாராம்.

Recommended Video

மனைவியுடன் வாக்களித்த Vijaysethupathi | TN Election 2021, Makkal Selvan VJS
வீடியோ காலில் கிரிக்கெட் பயிற்சி

வீடியோ காலில் கிரிக்கெட் பயிற்சி

விஜய் சேதுபதி நடிக்கும் 800 படம் கிரிக்கெட் மையப்படுத்தியது. அதனால் இந்த படத்திற்காக வீடியோ கால் மூலமாக பூஜா மற்றும் கிரிக்கெட் பயிற்சியாளர் ஒருவரிடம் விஜய் சேதுபதி பயிற்சி எடுத்துக் கொண்டுள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதியின் மகனும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X