விக்னேஷ் சிவனிடம் சண்டை போட்டேன்.. நயன் சமாதானப்படுத்தினார்.. விஜய் சேதுபதி ஓபன் டாக்
சென்னை: இயக்குநர் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் காதலித்து கடந்த 2022ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். அவர்களுக்கு உயிர், உலக் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். விக்னேஷ் சிவன் இப்போது எல்ஐசி என்ற படத்தை இயக்கிவருகிறார். லலித் படத்தை தயாரிக்க இதில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே.சூர்யா, கீர்த்தி ஷெட்டி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்துவருகின்றன.. இந்தச் சூழலில் விக்னேஷ் சிவன் குறித்து விஜய் சேதுபதி பேசிய விஷயம் ட்ரெண்டாகியுள்ளது.
போடா போடி படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். முதல் படத்திலேயே சிம்புவை ஹீரோவாக கமிட்டாக்கி கவனம் ஈர்த்தார். அதேபோல் சரத்குமாரின் மகள் வரலட்சுமி, நடிகை ஷோபனா என பெரிய ஸ்டார் வேல்யூவுடன் படம் உருவானது. ஸ்டார் வேல்யூ மட்டுமின்றி கதை ரீதியாகவும் சிறப்பாக அமைந்தது. ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

நானும் ரௌடிதான்: 2012ஆம் ஆண்டு வெளியான போடா போடி தோல்வி அடைந்ததை அடுத்து மூன்று வருடங்கள் திரைப்படம் இயக்காமல் இருந்தார். அதனையடுத்து விஜய் சேதுபதி ஒத்துக்கொள்ள நானும் ரௌடிதான் படத்தை இயக்கினார் விக்னேஷ் சிவன். தனுஷ் தயாரிப்பில் உருவான அப்படத்தில் நயன்தாரா நடித்தார். படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. இதன் மூலம் அனைவரும் திரும்பிப்பார்க்கும் இயக்குநராக மாறினார் விக்னேஷ்.
நயன்தாராவுடன் திருமணம்: இந்தப் படத்தில் நடித்தபோதுதான் விக்னேஷ் சிவனும், நயனும் காதலிக்க தொடங்கினர். பல வருடங்கள் லிவிங் டுகெதரில் இருந்தவர்கள் கடந்த வருடம் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்வீக் N சிவன் என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இரண்டு குழந்தைகளையும் வாடகை தாய் மூலம் அவர்கள் பெற்றுக்கொண்டார்கள். அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் வாடகை தாய் விவகாரத்தில் இருவரும் எந்த விதிமீறலையும் செய்யவில்லை என்பது அரசு சார்பில் நடந்த விசாரணையில் தெரியவந்தது.
எல்.ஐ.சி: விக்னேஷ் சிவன் இப்போது எல்ஐசி என்ற படத்தை இயக்கிவருகிறார். லலித் படத்தை தயாரிக்க இதில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே.சூர்யா, கீர்த்தி ஷெட்டி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் இதில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடியும் தருவாயில் இருப்பதாக கூறப்படுகிறது.
விஜய் சேதுபதி பேட்டி: இந்நிலையில் விக்னேஷ் சிவன் குறித்து விஜய் சேதுபதி பேசுகையில், “நானும் ரௌடிதான் படத்தின் முதல் நாள் ஷூட்டிங்கிற்கு பிறகு விக்னேஷ் சிவனை அழைத்து சண்டை போட்டேன். நீங்கள் எனக்கு நடிப்பு கற்றுத்தர முயற்சிக்கிறீர்கள் என்னை புரிந்துகொள்ளவில்லை என்று சொன்னேன். நான்கு நாட்களுக்கு பிறகு நயன் என்னிடம் வந்து உங்கள் இருவருக்கும் என்ன பிரச்னை என்று கேட்டு சமாதானப்படுத்தினார்.
நானும் ரௌடிதான் படத்தின் கதையை விக்னேஷ் சிவன் சொல்லியபோது அது அருமையாக இருந்தது. ஆனால் நாங்கள் ஒருவரையொருவர் புரிந்துகொள்ள நேரம் பிடித்தது. அந்த கேரக்டரில் நடிப்பது எளிது இல்லை என்று விஷ்ணு விஷால் சொன்னார். முதல் நான்கு நாட்களுக்கு அந்த கதாபாத்திரம் எனக்கு புரியவில்லை. அந்த நேரத்தில் நான் பாதுகாப்பு அற்றவனாக இருந்தேன். விக்னேஷ் சிவன் நிறைய மேஜிக் செய்வார்." என்றார்.


Click it and Unblock the Notifications











