“அஜித்துடன் ஒரு படம்”.. ஒரே பதிலில் ரசிகர்களை ஹேப்பி ஆக்கிய விஜய் சேதுபதி!
அஜித்துடன் நடிப்பது பற்றி பேசியுள்ளார் விஜய் சேதுபதி.
சென்னை: நடிகர் அஜித்துடன் சேர்ந்து நடிப்பது பற்றி நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.
விஜய் சேதுபதியின் சீதக்காதி படம் இம்மாதம் ரிலீசாக உள்ளது. அதனைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினியின் வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ள பேட்ட படம் அடுத்த மாதம் ரிலீசாக இருக்கிறது.

இந்நிலையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விஜய் சேதுபதியிடம் ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, 'நடிகர் அஜித்துடன் சேர்ந்து நடிப்பீர்களா?' என்ற கேள்வியும் அவரிடம் கேட்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த விஜய் சேதுபதி, "நிச்சயமாக, அப்படி ஒரு வாய்ப்பு அமைந்தால் நடிப்பேன்" எனப் பதிலளித்தார். விஜய் சேதுபதியின் இந்தப் பதிலால் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி, அஜித் ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இரண்டு கதாநாயகர்கள் உள்ள படத்தில் நடிப்பது விஜய் சேதுபதிக்கு புதிய விசயமல்ல. அவர் ஏற்கனவே, விக்ரம்வேதா, இறைவி, செக்கச் சிவந்த வானம் உட்பட பல படங்களில் இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட நடிகர்கள் நடித்துள்ள படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











